2 சாமுவேல் 23:3-4
2 சாமுவேல் 23:3-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார். அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.
2 சாமுவேல் 23:3-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேலின் இறைவன் என்னிடம் பேசி, இஸ்ரயேலின் கற்பாறையானவர் என்னிடம் சொன்னதாவது: ‘ஒருவன் நியாயத்துடன் மனிதர்களை அரசாளும்போதும், இறை பயத்துடன் ஆட்சி செய்யும்போதும், அவன் காலையில் மேகங்களால் மூடப்படாத சூரியனின் ஒளியைப்போல் இருப்பான். பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்யும் மழையின் பின் தோன்றும் செழிப்பைப் போலவும் இருப்பான்.’
2 சாமுவேல் 23:3-4 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேலின் தேவன் பேசினார். இஸ்ரவேலின் கன்மலையானவர் என்னிடம், ‘நேர்மையாய் ஆளும் மனிதன், தேவனை மதித்து ஆளும் மனிதன், உதயகால ஒளியைப் போன்றிருப்பான்: மேகங்கள் அற்ற அதிகாலையைப்போல இருப்பான். மழையைத் தொடர்ந்து தோன்றும் வெளிச்சத்தைப் போன்றிருப்பான். அம்மழை நிலத்திலிருந்து பசும்புல்லை எழச்செய்யும்’ என்று சொன்னார்.
2 சாமுவேல் 23:3-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார்.