ஓசியா 3:1-4

ஓசியா 3:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார். அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு, அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன். இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.

ஓசியா 3:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு யெகோவா என்னிடம், “நீ உன் மனைவியிடம் திரும்பவும் போய், அவளிடத்தில் அன்பு செலுத்து, அவள் உன் மனைவி. வேறொருவனால் அன்பு செலுத்தப்பட்டவளும், விபசாரியுமாய் இருந்தாலும், நீ அவளில் அன்பு செலுத்து. வேறு தெய்வங்களின் பக்கம் திரும்பி, புனிதமான திராட்சைப்பழ அடைகளை விரும்புகிற இஸ்ரயேலில் யெகோவா அன்பாயிருக்கிறதுபோல, நீயும் அவளில் அன்பாயிரு என்றார்.” எனவே நான் அவளை எனக்காக பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், 150 கிலோ வாற்கோதுமையும் கொடுத்து வாங்கினேன். பின்பு நான் அவளிடம், “அநேக நாட்களுக்கு நீ என்னுடனே வாழவேண்டும்; நீ வேசியாயிராதே, நீ ஒருவரோடும் பாலுறவு கொள்ளாதே; நான் உனக்காகத் காத்திருப்பேன், நான் உன்னுடன் வாழ்வேன் என்றேன்.” இஸ்ரயேலர் அநேக நாட்களுக்கு அரசனும் இளவரசனும் இல்லாமலும், பலியும், ஏபோத்தும், புனிதக் கற்களும் இல்லாமலும் இருப்பார்கள். விக்கிரகங்களுங்கூட இல்லாமல் இருப்பார்கள்.

ஓசியா 3:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார். அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி, அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன். இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.

ஓசியா 3:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர் மீண்டும் என்னிடம், “கோமேருக்குப் பல நேசர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நீ தொடர்ந்து அவளை நேசி. ஏனென்றால் அதுவே கர்த்தருடைய அன்புக்கு ஒப்பானது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்நியத் தெய்வங்களை தொழுகின்றனர். அவர்கள் (உலர்ந்த) திராட்சை அப்பத்தை உண்ண விரும்புகின்றனர்” என்றார். எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன், பிறகு நான் அவளிடம், “நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்” என்று சொன்னேன். இவ்வாறே, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு ராஜாவோ தலைவரோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் பலி இல்லாமலும், நினைவுக் கற்கள் இல்லாமலும் இருப்பார்கள். அவர்கள் ஏபோத் ஆடை இல்லாமலும் வீட்டுத் தெய்வங்கள் இல்லாமலும் இருப்பார்கள்.