எரேமியா 22:15-16
எரேமியா 22:15-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 22:15-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால், அது உன்னை அரசனாக்குமோ? உன்னுடைய தகப்பனிடம் உணவும், பானமும் இருக்கவில்லையோ? நியாயத்தையும், நீதியையும் அவன் செய்தபோது அவன் செய்த எல்லாம் அவனுக்கு நலமாயிருக்கவில்லையோ? அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான். அதனால் அவனுக்கு எல்லாம் நன்றாய் நடைபெற்றன. என்னை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் இதுவல்லவோ?” என்று யெகோவா அறிவிக்கிறார்.
எரேமியா 22:15-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறதினால் ராஜாவாக இருப்பாயோ? உன் தகப்பன் சாப்பிட்டுக் குடித்து, நியாயமும் நீதியும் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 22:15-16 பரிசுத்த பைபிள் (TAERV)
யோயாக்கீமும், உனது வீட்டில் ஏராளமாகக் கேதுரு மரங்களை வைத்திருக்கிறாய். அவை உன்னைப் பெரிய ராஜாவாக்காது. உன் தந்தை யோசியா உணவும் தண்ணீரும்பெற்று திருப்தி அடைந்தான். எது சரியானதோ நியாயமானதோ, அதைச் செய்தான். யோசியா அதனைச் செய்தான். அதனால் அவனுக்கு எல்லாமும் சரியாகப் போனது. யோசியா ஏழைகளுக்கும் யாருக்கெல்லாம் தேவை இருந்ததோ அவர்களுக்கும் உதவினான். ஆகையால், அவனுக்கு அனைத்துக் காரியங்களும் எளிமையாக நடந்தன. யோயாக்கீம், “தேவனை அறிவது” என்பதன் பொருள் என்ன? இதன் பொருள் சரியாக வாழு, நியாயமாக இரு, ஏழை எளியோருக்கு உதவு. என்னை அறிவது என்பதன் பொருள் இதுதான். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.