எரேமியா 33:8
எரேமியா 33:8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர்கள் எனக்கு விரோதமாக செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் அவர்களுக்கு மன்னிப்பேன்.
எரேமியா 33:8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை விலக்கிச் சுத்தப்படுத்தி, அவர்கள் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, எனக்கு விரோதமாகத் துரோகம் செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.
எரேமியா 33:8 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன்.