யோவான் 14:28
யோவான் 14:28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான் 14:28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“ ‘நான் உங்களைவிட்டுப் போகப்போகிறேன்’ என்றும், ‘உங்களிடத்தில் திரும்பிவருவேன்’ என்றும் நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவினிடத்தில் போகிறதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் பிதா, என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யோவான் 14:28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.