யோனா 2:2-3
யோனா 2:2-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
யோனா 2:2-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; உமது அலைகளும், அலையின் நுரைகளும் என்மேல் புரண்டன.
யோனா 2:2-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
யோனா 2:2-3 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் மிக மோசமான துன்பத்தில் இருந்தேன். நான் உதவிக்காகக் கர்த்தரை வேண்டினேன். அவர் எனக்குப் பதில் கொடுத்தார். நான் பாதாளத்தின் ஆழத்தில் இருந்தேன். கர்த்தாவே, நான் உம்மிடம் கதறினேன். நீர் எனது குரலைக் கேட்டீர். “நீர் என்னைக் கடலுக்குள் எறிந்தீர். உமது வல்லமையுடைய அலைகள் என்மேல் வீசின. நான் கடலுக்குள் மேலும், மேலும் ஆழத்திற்குள் சென்றேன். என்னைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது.