நெகேமியா 7:3-73

நெகேமியா 7:3-73 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது; அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து, எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்த தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது: பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர். ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர். சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர். சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர். பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர். பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர். அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர். அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர். பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர். ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர். எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர். ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர். பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர். ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர். கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர். பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர். ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர். பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர். கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர். மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர். பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர். வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர். மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர். ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர். லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர். செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர். ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர். பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர். ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர். லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர். பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர். வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர். நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர். கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர், லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர், பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர், பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர், பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர், நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர், சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர், யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர். செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர். நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்: தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர். ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரர். இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து. ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான். வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

நெகேமியா 7:3-73 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன். இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை. அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே: பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும் செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்: பாரோஷின் சந்ததி 2,172 பேர், செபத்தியாவின் சந்ததி 372 பேர், ஆராகின் சந்ததி 652 பேர், யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர், ஏலாமின் சந்ததி 1,254 பேர், சத்தூவின் சந்ததி 845 பேர், சக்காயின் சந்ததி 760 பேர், பின்னூயியின் சந்ததி 648 பேர், பெபாயின் சந்ததி 628 பேர், அஸ்காதின் சந்ததி 2,322 பேர், அதோனிகாமின் சந்ததி 667 பேர், பிக்வாயின் சந்ததி 2,067 பேர், ஆதீனின் சந்ததி 655 பேர், எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர், ஆசூமின் சந்ததி 328 பேர், பேஸாயின் சந்ததி 324 பேர், ஆரீப்பின் சந்ததி 112 பேர், கிபியோனின் சந்ததி 95 பேர். பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர், ஆனதோத்தின் மனிதர் 128 பேர், பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர், கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர், ராமா, கேபாவின் மனிதர் 621 பேர், மிக்மாஸின் மனிதர் 122 பேர், பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர், மற்ற நேபோவின் மனிதர் 52 பேர், மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர், ஆரீமின் மனிதர் 320 பேர், எரிகோவின் மனிதர் 345 பேர், லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர், செனாகாவின் மனிதர் 3,930 பேர். ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர், இம்மேரின் சந்ததி 1,052 பேர், பஸ்கூரின் சந்ததி 1,247 பேர், ஆரீமின் சந்ததி 1,017 பேர். லேவியர்கள்: ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர். பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர். வாசல் காவலர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர். ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத், கேரோசு, சீயா, பாதோன், லெபானா, அகாபா, சல்மாயி, ஆனான், கித்தேல், காகார், ரயாயா, ரேசீன், நெக்கோதா, காசாம், ஊசா, பாசெயா, பேசாய், மெயூனீம், நெபுசீம், பக்பூக், அகுபா, அர்கூர், பஸ்லுத், மெகிதா, அர்ஷா, பர்கோஸ், சிசெரா, தேமா, நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள். சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெரிதா, யாலா, தர்கோன், கித்தேல், செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள். ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர். பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை. அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர். ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சிலாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான். இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள். ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான். எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர். இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர். மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன. குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான். சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 மினா வெள்ளியையும் கொடுத்தார்கள். மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள். ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள்.

நெகேமியா 7:3-73 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து, எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது: பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர். செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர். ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர். யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர். ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர். சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர். சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர். பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர். பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர். அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர். அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர். பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர். ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர். எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர். ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர். பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர். ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர். கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர். பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர். ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர். பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர். கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர். ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர். மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர். பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர். வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர். மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர். ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர். எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர். லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர். செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர். ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர். இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர். பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர். ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர். லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர். பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர். வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர். ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள், கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள், லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள், ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள், ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள், பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள், பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள், பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள், பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள், நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள், யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள். ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர். ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள். இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள். அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245. ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720. வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான். வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள். ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

நெகேமியா 7:3-73 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நான் ஆனானியிடமும் அனனியாவிடமும், “ஒவ்வொரு நாளும் சூரியன் மேலே ஏறும்வரை எருசலேமின் வாசல் கதவுகளைத் திறக்க காத்திருக்க வேண்டும். சூரியன் அடைவதற்கு முன்னால் வாசல் கதவை மூடித் தாழ்ப்பாளிடவேண்டும். எருசலேமில் வாழ்கின்றவர்களைக் காவலர்களாகத் தேர்ந்தெடு. நகரத்தைக் காவல் செய்ய முக்கியமான இடங்களில் அந்த ஜனங்களில் சிலரை நிறுத்து. மற்ற மனிதர்களை அவர்களது வீட்டின் அருகில் நிறுத்து” என்று கூறினேன். இப்பொழுது நகரம் பெரியதாய் இருந்தது. அங்கு அதிக இடம் இருந்தது. ஆனால் அந்த நகரத்தில் மிகக்குறைவான ஜனங்களே வசித்தனர். வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை. எனவே என்னுடைய தேவன் என் இதயத்தில் அனைத்து ஜனங்களும் கூடவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கினார். முக்கியமான ஜனங்களையும் அதிகாரிகளையும் பொது ஜனங்களையும் கூட்டத்திற்கு நான் அழைத்தேன். நான் இதனைச் செய்தேன். அதனால் அனைத்து குடும்பங்களையும் பற்றி ஒரு பட்டியல் செய்ய என்னால் முடிந்தது. முன்னால் வந்தவர்களின் வம்ச பட்டியல் எனக்கு அப்பொழுது கிடைத்தது. இதுதான் நான் கண்ட எழுத்துக்கள்: அதில் கைதிகளாக இருந்து திரும்பி வந்த அம்மாகாணத்தார்கள் இருந்தார்கள். கடந்த காலத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்த ஜனங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டு போனான். அந்த ஜனங்கள் எருசலேமிற்கும் யூதாவிற்கும் திரும்பி வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகரத்திற்குச் சென்றனர். இந்த ஜனங்கள் செருபாபேலோடு திரும்பியவர்கள். யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா ஆகியோர். நாடு கடத்தலிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையும் பெயர்களும் கொண்ட பட்டியல்: பாரோஷின் சந்ததியினர் 2,172 செபத்தியாவின் சந்ததியினர் 372 ஆராகின் சந்ததியினர் 652 யெசுவா, யோவாப் என்பவர்களின் குடும்பத்திலிருந்த பாகாத்மோவாபின் சந்ததியினர் 2,818 ஏலாமின் சந்ததியினர் 1,254 சத்தூவின் சந்ததியினர் 845 சக்காயின் சந்ததியினர் 760 பின்னூவின் சந்ததியினர் 648 பெபாயின் சந்ததியினர் 628 அஸ்காதின் சந்ததியினர் 2,322 அதோனிகாமின் சந்ததியினர் 667 பிக்வாயின் சந்ததியினர் 2,067 ஆதீனின் சந்ததியினர் 655 எசேக்கியாவின் குடும்பத்தின் வழியாக ஆதேரின் சந்ததியினர் 98 ஆசூமின் சந்ததியினர் 328 பேசாயின் சந்ததியினர் 324 ஆரீப்பின் சந்ததியினர் 112 கிபியோனின் சந்ததியினர் 95 பெத்லகேம் ஊராரும் நெத்தோபா ஊராரும் 188 ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பெத்அஸ்மாவேத் ஊரார்கள் 42 கீரியாத்யாரீம், கெபிரா பேரோத் ஊரார்கள் 743 ராமா, காபா ஊரார்கள் 621 மிக்மாஸ் ஊரார்கள் 122 பெத்தேல், ஆயி ஊரார்கள் 123 வேறொரு நேபோ ஊரார்கள் 52 மற்றொரு ஏலாம் ஊரார்கள் 1,254 ஆரீம் ஊரார்கள் 320 எரிகோ ஊரார்கள் 345 லோத், ஆதீத், ஓனோ ஊரார்கள் 721 செனாகா ஊரார்கள் 3,930 ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததியினர் 973 இம்மேரின் சந்ததியினர் 1,052 பஸ்கூரின் சந்ததியினர் 1,247 ஆரீமின் சந்ததியினர் 1,017 லேவியின் கோத்திரத்தினர்: ஓதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேல் குமாரனாகிய யெசுவாவின் சந்ததியினர் 74 பாடகரானவர்கள்: ஆசாபின் சந்ததியினர் 148 வாசல் காவலாளரானவர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபா ஆகியோரின் சந்ததியினர் 138 இவர்கள் ஆலய பணியாளர்கள்: சீகா, அசுபா, தபாகோத்தின் சந்ததியினர் கேரோஸ், சீயா, பாதோன், லெபனா, அகாபா, சல்மா, ஆனான், கித்தேல், காகார், ராயாக், ரேத்சீன், நெகோதா, காசாம், ஊசா, பாசெயாக், பேசாய், மெயுநீம், நெபிஷசீம், பக்பூக், அகுபா, அர்கூர், பஸ்லீ, மெகிதா, அர்ஷா, பர்கோஷ், சிசெரா, தாமா, நெத்சியா, அதிபா. சாலொமோனது வேலைக்காரர்களின் சந்ததியினர்: சோதா, சொபெரேத், பெரிதா, யாலா, தர்கோன், கித்தேல், செபத்தியா, அத்தீல், பொகெரேத், ஆமோன். ஆலய வேலைக்காரர்களும், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர் 392 தெல்மெலாக், தெல்அர்சா, கேருபில், ஆதோன், இம்மேர் ஆகிய ஊர்களில் இருந்து சில ஜனங்கள் எருசலேமிற்கு வந்தனர். ஆனால் இந்த ஜனங்கள் தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் தந்தைகளின் வம்சத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். தெலாயா, தொபியா, நெகேதா ஆகியோரின் சந்ததியினர் 642 ஆசாரியர்களின் குடும்பத்திலிருந்து அபாயா, கோசு, பர்சில்லாய் சந்ததியினர் (கிலேயாவைச் சேர்ந்த பர்சில்லாயின் குமாரத்தி ஒருத்தியை ஒரு மனிதன் மணந்ததால், அந்த மனிதன் பர்சில்லாயின் சந்ததியானாக எண்ணப்பட்டான்.) இந்த ஜனங்கள் தமது வம்சவரலாற்றைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை. அவர்களால் தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தனர். எனவே அவர்களால் ஆசாரியர்களாகச் சேவைச் செய்ய முடியவில்லை. அவர்களின் பெயர்களும் ஆசாரியர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த ஜனங்கள் மிகவும் பரிசுத்தமான உணவை உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஊரீம், தும்மீம் என்பவைகளை உபயோகித்து தலைமை ஆசாரியன் தேவனிடம் என்ன செய்யலாம் என்று கேட்கும்வரை இவ்வகையான எந்த உணவையும் அவர்களால் உண்ணமுடியவில்லை. எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர். 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் அவர்களுக்கு இருந்தன. வம்சத் தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய ஆடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான். வம்சத் தலைவர்களில் சிலர் வேலையின் கரூவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். மற்ற ஜனங்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தனர். ஆசாரியரும், லேவியின் கோத்திரத்தாரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஆலய வேலைக்காரர்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். இஸ்ரவேலின் மற்ற ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஆண்டில் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறி இருந்தனர்.