சங்கீதம் 103:15-16
சங்கீதம் 103:15-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மனிதர்களுடைய வாழ்க்கை புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; அவர்கள் வயல்வெளியின் பூவைப்போல் பூக்கிறார்கள். காற்று அதின்மேல் வீசுகிறது, அது உதிர்ந்து விழுகிறது; அது இருந்த இடமும் அதை நினைவில் கொள்ளாது.
சங்கீதம் 103:15-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது; வெளியின் பூவைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
சங்கீதம் 103:15-16 பரிசுத்த பைபிள் (TAERV)
நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார். நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார். நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார். அம்மலர் சீக்கிரம் மலர்கிறது. வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது. பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.