சங்கீதம் 103:2-5
சங்கீதம் 103:2-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
சங்கீதம் 103:2-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி; அவர் செய்த நன்மைகள் யாவற்றையும் மறவாதே. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்; உன்னுடைய நோய்களையெல்லாம் சுகமாக்குகிறார். அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார், உடன்படிக்கையின் அன்பினாலும், இரக்கங்களினாலும் உன்னை முடிசூட்டுகிறார். அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்; அதினால் உன் இளமை கழுகின் இளமையைப்போல் புதுப்பிக்கப்படுகிறது.
சங்கீதம் 103:2-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்; அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே. அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி, உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
சங்கீதம் 103:2-5 பரிசுத்த பைபிள் (TAERV)
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே. நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார். அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார். தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.