சங்கீதம் 106:4-5
சங்கீதம் 106:4-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, நீர் உமது மக்களுக்குத் தயவு காண்பிக்கும்பொழுது, என்னையும் நினைவில்கொள்ளும், நீர் அவர்களை மீட்கும்போது, எனக்கும் உதவிசெய்யும். அதினால் நீர் தெரிந்துகொண்ட மக்களின் நல்வாழ்வை அவர்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன். உமது நாட்டுக்குரிய மகிழ்ச்சியில் நான் பங்குகொள்வேன்; உமது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களுடன் இணைந்து உமக்குத் துதி செலுத்துவேன்.
சங்கீதம் 106:4-5 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது என்னை நினைவுகூர்ந்து இரட்சியும். கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும். என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும். உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
சங்கீதம் 106:4-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு, உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
சங்கீதம் 106:4-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு, உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.