சங்கீதம் 136:23-26 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
சங்கீதம் 136:23-26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:23-26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:23-26 TAERV (பரிசுத்த பைபிள்)
நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
சங்கீதம் 136:23-26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.