சங்கீதம் 2:2-3
சங்கீதம் 2:2-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள், ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது: “அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து, அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”
சங்கீதம் 2:2-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து: அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.
சங்கீதம் 2:2-3 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்களுடைய ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தரையும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள். அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த ராஜாவையும் எதிர்த்துக் கலகம் செய்வோம். அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.