சங்கீதம் 91:5-7
சங்கீதம் 91:5-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய். இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும், அது உன்னை நெருங்காது.
சங்கீதம் 91:5-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
சங்கீதம் 91:5-7 பரிசுத்த பைபிள் (TAERV)
இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை. நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய். இருளில் வரும் கொடிய நோய்களுக்கும், நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய். நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய். உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும். உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள்.
சங்கீதம் 91:5-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.