வெளிப்படுத்தின விசேஷம் 15:4
வெளிப்படுத்தின விசேஷம் 15:4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமல் இருப்பார்கள்? யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடுக்காமலும் இருப்பார்கள்? ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா நாட்டினரும் வந்து உமக்கு முன்பாக ஆராதனை செய்வார்கள், ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”
வெளிப்படுத்தின விசேஷம் 15:4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 15:4 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள். எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள். நீர் ஒருவரே பரிசுத்தமானவர் எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள். ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”