வெளிப்படுத்தின விசேஷம் 6:12-13
வெளிப்படுத்தின விசேஷம் 6:12-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் ஆறாம் முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கருப்புக் கம்பளியைப்போலக் கருத்துப்போனது; சந்திரன் இரத்தம்போல ஆனது. அத்திமரம் பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 6:12-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையைத் திறப்பதை நான் பார்த்தேன். அப்பொழுது பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அவ்வேளையில், சூரியன் கருப்புக் கம்பளியைப்போல் கருத்துப்போனது. சந்திரன் முழுவதும் இரத்த சிவப்பு நிறமாய் மாறியது. வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தன. பலத்த காற்றினால் அத்திமரம் அசைக்கப்படும்போது, பருவம் பிந்திக்காய்த்த அத்திக்காய்கள் விழுவதுபோல், அவை விழுந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 6:12-13 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆட்டுக்குட்டியானவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைக் கவனித்தேன். அப்போது பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. சூரியன் இருண்டது. துக்கம் கொண்டாடுகிறவன் அணிகிற ஆடைகள்போல அது கறுத்தது. நிலவு இரத்தம்போல சிவப்பானது. வானத்து நட்சத்திரங்கள், புயல் காலத்தில் அத்திமரத்திலிருந்து அத்திப் பழங்கள் உதிருவது போன்று பூமியில் உதிர்ந்தன.
வெளிப்படுத்தின விசேஷம் 6:12-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.