வெளிப்படுத்தின விசேஷம் 7:3-4
வெளிப்படுத்தின விசேஷம் 7:3-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நமது இறைவனுடைய ஊழியர்களின் நெற்றிகளின்மேல், நாங்கள் முத்திரையிடும் வரைக்கும், நிலத்தையோ கடலையோ மரங்களையோ அழிக்கவேண்டாம்” என்றான். அப்பொழுது முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதை நான் கேட்டேன்: இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, 1,44,000 பேர்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:3-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான். முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:3-4 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர்களிடம் அந்தத் தேவ தூதன், “நாம் நமது தேவனின் தொண்டர்களுக்கு அவர்கள் நெற்றியில் அடையாளக்குறி இடவேண்டும். அதுவரை பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள்” என்று கூறினான். பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பல்வேறு குடும்பக் குழுக்களிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:3-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.