அரசனாக ஏரோது ஆட்சியிலிருந்த காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்ததையடுத்து, இதோ! கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள், “யூதருக்கு அரசனாகப் பிறந்திருக்கின்றவர் எங்கே இருக்கின்றார்? அவருடைய நட்சத்திரம் உதயமானபோது நாங்கள் அதனைக் கண்டதனால், அவரை வழிபடுவதற்கு வந்திருக்கின்றோம்” என்றார்கள்.