இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 15:8
நிச்சயம்
4 நாட்கள்
தேவனால் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; பரலோகம் செல்வேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம்! இந்த நிச்சயம் தேவனை சந்திப்பதன் மூலமாகவும் அவரது வார்த்தையை தியானம் செய்வதன் மூலமாகவும் அதிகரிக்கிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தேவனில் உறுதிப்பட அவை உங்களுக்கு உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு விளக்க முறைக்கு செல்லவும் MemLok.com
கீழ்ப்படிதல்
2 வாரங்கள்
என்னில் அன்பாயிருக்கிறவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான் என்று இயேசுவே கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் நமக்கு என்ன ஆனாலும் சரி, நம் கீழ்ப்படிதல் கர்த்தருக்கு மிகவும் முக்கியமானது. இந்த "கீழ்ப்படிதல்" வாசிப்புத் திட்டம் வேதத்தில் கீழ்ப்படிதலைக் குறித்துச் சொல்லும் விஷயங்களை எடுத்துக் காட்டுகிறது: எவ்வாறு நேர்மையான மனப்பாங்கைப் பேணுவது, இரக்கத்தின் செயல் பங்கு, எவ்வாறு கீழ்ப்படிதல் நம்மை விடுதலையாக்கி நம் வாழ்வை ஆசீர்வதிக்கிறது, மற்றும் பல அம்சங்கள்.
நிரம்பி வழிய 21 நாட்கள்
21 நாட்கள்
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!