இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 3:16
கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?
5 நாட்கள்
கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது 'ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்', நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: "கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?" அல்லது "எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?" என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும்.
மன்னிப்பு
7 நாட்கள்
சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.
“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!
8 நாட்கள்
நீங்கள் தனித்திருக்கவில்லை. வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும், நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும் இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு
13 நாட்கள்
தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளின் அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடு
25 நாட்கள்
அன்புள்ள அம்மா, கிறிஸ்துமஸ் பருவம் எப்போதுமே உற்சாகம் மற்றும் குழப்பத்தில் உங்களை கடந்து செல்வது போல் தோன்றுகிறதா? இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்கலாம். இந்த கிறிஸ்துமஸில் உங்கள் குழந்தைகளுடன் கிறிஸ்துவின் அன்பின் பொக்கிஷத்தைக் கண்டறியவும்! குழந்தைகளின் அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடு ஒரு அழகான இருபத்தைந்து நாள் தியானம், ஒரு ஒருங்கிணைந்த அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடு அச்சிடத்தக்கது, இது உங்கள் குழந்தைகளின் இருதயங்களை கர்த்தரிடம் சுட்டிக்காட்டவும், இந்த கிறிஸ்துமஸ் காலத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றவும் உதவும்!