வெளிப்படுத்தல் 6இலிருந்து பிரபலமான வேதாகம வசனங்கள்

அவர்கள் உரத்த குரலில், “ஆண்டவராகிய கர்த்தாவே, பரிசுத்தமும் சத்தியமும் உள்ளவரே, நீர் பூமியில் குடியிருக்கிறவர்களை நியாயந்தீர்ப்பது எப்போது? எங்களுடைய இரத்தப்பழிக்கான தண்டனையை அவர்களுக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும்?” என்று கூக்குரலிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வெள்ளை உடை கொடுக்கப்பட்டது. அத்துடன், அவர்கள் இன்னும் சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஏனெனில், அவர்களைப்போல் கொல்லப்பட இருக்கும், அவர்களுடைய எல்லா உடன் ஊழியர்களும், சகோதரர்களும் கொல்லப்படும் வரைக்கும், அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.