1
சங்கீத புத்தகம் 91:2
பரிசுத்த பைபிள்
நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை, என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 91:2 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 91:1
மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும். சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும்.
சங்கீத புத்தகம் 91:1 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 91:15
என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள். நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன். அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன். நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.
சங்கீத புத்தகம் 91:15 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 91:11
தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார். நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.
சங்கீத புத்தகம் 91:11 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 91:4
நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும். அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார். தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார்.
சங்கீத புத்தகம் 91:4 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 91:9-10
ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய். தீயவை உனக்கு நிகழாது, உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
சங்கீத புத்தகம் 91:9-10 ஆராயுங்கள்
7
சங்கீத புத்தகம் 91:3
மறைவான ஆபத்துக்களிலிருந்தும் ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார்.
சங்கீத புத்தகம் 91:3 ஆராயுங்கள்
8
சங்கீத புத்தகம் 91:7
நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய். உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும். உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள்.
சங்கீத புத்தகம் 91:7 ஆராயுங்கள்
9
சங்கீத புத்தகம் 91:5-6
இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை. நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய். இருளில் வரும் கொடிய நோய்களுக்கும், நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய்.
சங்கீத புத்தகம் 91:5-6 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்