இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “பெண்ணே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள்.
அப்போது இயேசு அவளிடம், “நானும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்க மாட்டேன். போ, இனிமேல் பாவம் செய்யாதே” என்றார்.