1
மாற்கு 14:36
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அவர் தொடர்ந்து, “அப்பா பிதாவே, எல்லாவற்றையும் செய்ய உம்மால் இயலும். இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு எடுத்து விடும். ஆனாலும் என் விருப்பப்படியல்ல, உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்றார்.
ஒப்பீடு
மாற்கு 14:36 ஆராயுங்கள்
2
மாற்கு 14:38
நீங்கள் விழித்திருந்து மன்றாடுங்கள், அப்போது சோதனைக்குள் விழ மாட்டீர்கள். ஆவி ஆர்வமாயிருக்கிறது, ஆனால் உடலோ பலவீனமுள்ளது” என்றார்.
மாற்கு 14:38 ஆராயுங்கள்
3
மாற்கு 14:9
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார்.
மாற்கு 14:9 ஆராயுங்கள்
4
மாற்கு 14:34
அத்துடன் அவர், “உயிர் நீங்கும் அளவுக்கு என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள்” என்றார்.
மாற்கு 14:34 ஆராயுங்கள்
5
மாற்கு 14:22
அவர்கள் உணவு உட்கொண்டிருக்கையில் இயேசு அப்பத்தை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைத் துண்டுகளாக்கி தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள், இது என்னுடைய உடல்.”
மாற்கு 14:22 ஆராயுங்கள்
6
மாற்கு 14:23-24
பின்பு அவர் கிண்ணத்தையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும் அந்தக் கிண்ணத்திலிருந்து அருந்தினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “இது புதிய உடன்படிக்கையின் என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இது அநேகருக்காக சிந்தப்படுகிறது.
மாற்கு 14:23-24 ஆராயுங்கள்
7
மாற்கு 14:27
இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன், அப்போது செம்மறியாடுகள் சிதறடிக்கப்படும்’ என்று எழுதியிருக்கின்றபடியே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப் போவீர்கள்.
மாற்கு 14:27 ஆராயுங்கள்
8
மாற்கு 14:42
எழுந்திருங்கள், நாம் போவோம்! இதோ என்னைக் காட்டிக் கொடுப்பவன் வந்துவிட்டான்!” என்றார்.
மாற்கு 14:42 ஆராயுங்கள்
9
மாற்கு 14:30
அப்போது இயேசு, “உண்மையாகவே நான் உனக்கு சொல்கின்றேன், இன்று இரவே சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னதாகவே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.
மாற்கு 14:30 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்