2 நாளாகமம் முன்னுரை

முன்னுரை
1 நாளாகமத்தில் ஆரம்பிக்கப்பட்ட யூதா மக்களின் வரலாற்றை இப்புத்தகம் தொடர்கிறது. இப்புத்தகம் நாடுகடத்தப்பட்டு திரும்பி வந்திருந்த இஸ்ரயேலரை உற்சாகப்படுத்தவும் தைரியப்படுத்தவும் எஸ்றாவினால் எழுதப்பட்டது.
2 நாளாகமம் புத்தகமானது அரசன் சாலொமோனின் ஆட்சி, ஆலயம் கட்டப்படல், அதன் அர்ப்பணம் ஆகியனபற்றி கூறுகிறது. அத்துடன் அரசின் பிரிவுகளைப்பற்றி சுருக்கமாகக் கூறி அதன்பின் தென் அரசான யூதாவின் அரசர்களைப்பற்றி விபரிக்கிறது. மேலும் யோசியா, எசேக்கியா ஆகிய அரசர்களால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் பற்றியும் கூறுகிறது. நாடு பாபிலோனியரால் கைப்பற்றப்படல், எருசலேமின் வீழ்ச்சி, ஆலயம் அழிக்கப்படல் ஆகியவற்றுடன் இப்புத்தகம் முடிவடைகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 நாளாகமம் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்