2 இராஜாக்கள் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் இஸ்ரயேல் அரசர்களின் வரலாறு எழுதப்பட்டுள்ள 1, 2 சாமுயேல் 1, 2 இராஜாக்கள் ஆகிய நான்கு புத்தகங்களில் நான்காவது புத்தகமாகும்.
2 இராஜாக்கள் புத்தகம் இஸ்ரயேல் இரண்டு அரசுகளாகப் பிரிக்கப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து கூறி, நாடு பாபிலோனியரால் கைப்பற்றப்படுவதுடன் முடிவடைகிறது. இஸ்ரயேலர் விக்கிரக ஆராதனையில் ஈடுபடுதல், அவர்களின் ஒழுக்கக்கேடு ஆகியவை பற்றி இப்புத்தகத்தில் கூறப்படுகிறது. கி.மு. 722 ஆம் ஆண்டில் அசீரியரால் வட அரசான இஸ்ரயேல் கைப்பற்றப்படும்வரை 130 வருடங்களுக்கு அவ்வரசு கொடுமையான அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தென் அரசான யூதா கி.மு. 586 ஆம் ஆண்டில் பாபிலோனியரால் கைப்பற்றப்படும்வரை மேலும் 136 வருடங்களுக்கு அவ்வரசு நிலைநின்றது. அதன்பின் ஆலயம் அழிக்கப்பட்டது. அந்த இருண்ட காலப்பகுதியில் முப்பது இறைவாக்கினர் இறைவனின் செய்தியை மக்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் அறிவித்தார்கள். அவர்களில் எலியாவும் எலிசாவும் முக்கியமானவர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 இராஜாக்கள் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்