கலாத்தியர் முன்னுரை

முன்னுரை
இக்கடிதத்தை கி.பி. 48 ஆம் ஆண்டிலிருந்து 49 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். பவுல் தனது முதலாவது நற்செய்தி பயணத்தின்போது கலாத்தியாவிலுள்ள மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது காலத்திற்குள்ளாக, சில யூத விசுவாசிகளும் யூதரல்லாத விசுவாசிகளும் அங்கு வந்து மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்றும், அப்படிச் செய்தால் மட்டுமே, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார்கள். இந்தத் தவறான போதனையைக் கண்டிப்பதற்காக பவுல் இந்தக் கடிதத்தை எழுதுகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலமாக இறைவனுடைய கிருபையினால் மனிதர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்பதே இதில் காணப்படும் தெளிவான போதனை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

கலாத்தியர் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்