சகரியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 520 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களாயிருந்து, திரும்பவும் தங்கள் நாட்டிற்கு வந்து குடியமர்ந்த இஸ்ரயேல் மக்களுக்கே சகரியா இறைவாக்குரைத்தார். பயமின்றி இறைவனுக்குப் பணிசெய்யுமாறு இவர் அந்த மக்களை ஊக்குவித்தார். இப்புத்தகம் தொடர்ச்சியான எட்டு தரிசனங்களுடன் ஆரம்பிக்கிறது. தரிசனங்களைத் தொடர்ந்து, தொடர்ச்சியான செய்திகளும் காணப்படுகின்றன. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த இறைவாக்குகளும் காணப்படுகின்றன. இறைவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற யெகோவா. இறைவன் தமது மக்களுக்கு பாதுகாப்பையும், நல்வாழ்வையும், பலத்தையும், கிருபையையும் கொடுக்கிறார் என்ற உண்மை இதில் வலியுறுத்தப்படுகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சகரியா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்