ஆமோஸ் 3:2-6

ஆமோஸ் 3:2-6 TAERV

“பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.” இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய ஒரே வழியில் நடக்க முடியாது. காட்டிலுள்ள சிங்கம், ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும். ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால், அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம். கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால் ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது. கண்ணி மூடினால் அது பறவையைப் பிடிக்கும். எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால், ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள். நகரத்திற்கு துன்பம் வந்தால், அதற்கு கர்த்தர் காரணமாவார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஆமோஸ் 3:2-6