ஆமோஸ் 3:2-6

ஆமோஸ் 3:2-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன். இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ? தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ? குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

ஆமோஸ் 3:2-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களையே நான் தெரிந்தெடுத்தேன். உங்கள் அநேக பாவங்களுக்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.” ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு இருவர் ஒருமனப்படாமலிருந்தால், அவர்கள் ஒன்றுசேர்ந்து நடப்பது எப்படி? இரை அகப்படாமல் இருக்கும்போது, புதருக்குள் இருந்து சிங்கம் கர்ஜிக்குமோ? தான் ஒன்றும் பிடிக்காமல் இருக்கும்போது, அது தன் குகையில் இருந்து உறுமுமோ? கண்ணி விரிக்கப்படாத தரையில் பறவை சிக்குமோ? பொறியில் ஒன்றும் சிக்காதிருக்கையிலே, பொறி நிலத்திலிருந்து துள்ளுமோ? பட்டணத்தில் எக்காளம் முழங்குகையில் மக்கள் நடுங்காதிருப்பார்களோ? பட்டணத்தில் பேராபத்து வரும்போது, யெகோவா அல்லவா அதை ஏற்படுத்தினார்?

ஆமோஸ் 3:2-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமட்டும் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன். இரண்டுபேர் ஒருமனப்படாமல் இருந்தால் ஒன்றுசேர்ந்து நடந்துபோவார்களோ? தனக்கு இரை அகப்படாமல் இருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடிக்காமல் இருக்கும்போது பாலசிங்கம் தன்னுடைய குகையிலிருந்து சத்தமிடுமோ? குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாமல் இருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் அகப்படாமல் இருக்கும்போது, கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? ஊரில் எக்காளம் ஊதினால், மக்கள் கலங்காமல் இருப்பார்களோ? யெகோவாவுடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

ஆமோஸ் 3:2-6 பரிசுத்த பைபிள் (TAERV)

“பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.” இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய ஒரே வழியில் நடக்க முடியாது. காட்டிலுள்ள சிங்கம், ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும். ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால், அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம். கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால் ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது. கண்ணி மூடினால் அது பறவையைப் பிடிக்கும். எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால், ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள். நகரத்திற்கு துன்பம் வந்தால், அதற்கு கர்த்தர் காரணமாவார்.