ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மரணமானது எக்காலத்திற்கும் அழிக்கப்படும். கர்த்தராகிய எனது ஆண்டவர், ஒவ்வொரு முகத்திலும் வடியும் கண்ணீரைத் துடைப்பார். கடந்த காலத்தில், அவரது ஜனங்கள் எல்லாரும் துக்கமாயிருந்தார்கள். ஆனால், பூமியிலிருந்து தேவன் அந்தத் துக்கத்தை எடுத்துவிடுவார். இவையெல்லாம் நிகழும். ஏனென்றால், இவ்வாறு நிகழும் என்று கர்த்தர் கூறினார். அந்த நேரத்தில், ஜனங்கள், “இங்கே எங்கள் தேவன் இருக்கிறார். அவர், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒருவர், நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார். நமது கர்த்தருக்காக நாம் காத்துக்கொண்டிருந்தோம். கர்த்தர் நம்மைக் காப்பாற்றும்போது, நாம் கொண்டாடுவோம், மகிழ்ச்சி அடைவோம்.”
வாசிக்கவும் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 25
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 25:7-9
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்