ஏசாயா 12:4-5
ஏசாயா 12:4-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள். யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.
ஏசாயா 12:4-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அக்காலத்திலே நீங்கள் சொல்வது: யெகோவாவை துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
ஏசாயா 12:4-5 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு நீ கூறுவாய்: “கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள் அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!” கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்! ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார். உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள். எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள்.
ஏசாயா 12:4-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள். கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.