ஏசாயா 60:1-3
ஏசாயா 60:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“எழும்பிப் பிரகாசி, ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது, யெகோவாவின் மகிமை உன்மேல் உதிக்கிறது. இதோ, பூமியை இருள் மூடியிருக்கிறது, காரிருள் மக்கள் கூட்டங்களைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால் யெகோவா உன்மேல் உதிக்கிறார், அவரின் மகிமை உன்மேல் தோன்றுகிறது. பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள்.
ஏசாயா 60:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, யெகோவாவுடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் மக்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் யெகோவா உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.
ஏசாயா 60:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
“எருசலேமே! என் வெளிச்சமே! எழு! உனது வெளிச்சம் (தேவன்) வந்துகொண்டிருக்கிறது. கர்த்தருடைய மகிமை உன் மேல் ஒளிவீசும். இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது. ஜனங்கள் இருளில் உள்ளனர். ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார். அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும். தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும். ராஜாக்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள்.
ஏசாயா 60:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.