சங்கீதம் 40:1-2
சங்கீதம் 40:1-2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என் பக்கமாய்த் திரும்பி என் கதறுதலைக் கேட்டார். அழிவின் குழியிலிருந்தும் மண் சகதியிலிருந்தும் அவர் என்னை வெளியே தூக்கியெடுத்தார், அவர் கற்பாறைமேல் என் கால்களை நிறுத்தி, நிற்பதற்கு ஒரு உறுதியான இடத்தையும் எனக்குக் கொடுத்தார்.
சங்கீதம் 40:1-2 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாகச் சாய்ந்து, என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி
சங்கீதம் 40:1-2 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார். அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார். அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார். சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார். என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார். என் பாதங்களை உறுதியாக்கினார்.