உன்னதப்பாட்டு 5:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

உன்னதப்பாட்டு 5:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

உன்னதப்பாட்டு 5:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே! மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? மணவாளி

உன்னதப்பாட்டு 5:9 TAERV (பரிசுத்த பைபிள்)

அழகான பெண்ணே, உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்? உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா? எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?

உன்னதப்பாட்டு 5:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பெண்களுள் பேரழகியே, உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?