பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்) மாதிரி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

7 ல் 5 நாள்

வேலையில் நமது உக்கிராணத்துவம் - உற்பத்தித்திறனும், உடமைகளும்: 

இன்றைய உலகில் வேலையைக் கண்டு கொள்வது கடினமல்ல. ஆனால் நல்லவர்களும், திறமைசாலிகளும் கிடைப்பது கடினமானது. அதனால் சில நேரங்களில் இளைஞர்கள், குறைந்த வேலைக்கு அதிக சம்பளம் கிடைத்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் இங்கு ஒரு வித்தியாசத்தை உண்டாக்க முடியும். தன்னுடைய வேலையை நேசிப்பதும், அதில் உயர்ந்த நிலைக்கு வருவதற்காக அயராது முயற்சிப்பதுமே என்னுடைய தந்தையிடம் எனக்குப் பிடித்த காரியங்கள். 

கடந்த 20 ஆண்டுகளில், உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா பெரிய அளவில் அடிச்சுவடுகளைப் பதித்துள்ளது. அதில் நமது பெருமைகளும், குறைகளும் கவனிக்கப்பட வேண்டும். நம்முடைய உற்பத்திகளை வைத்து, அதிக தூரம் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்பதில் வித்தியாசம் உண்டு. சிறிய மூலையில் பிரகாசிக்கிற விளக்காயிருக்கிறேனா? முன்னேற்றத்திற்கான அளவுகோள்களாக என்னை மக்கள் முன்னிறுத்துகிறர்களா? முன்னேற்றமும், கடின உழைப்பும் கிறிஸ்தவர்களின் விருப்பமல்ல - அதுவே அவர்கள் வாழ்க்கை. 

நாம் ஈடுபடும் செயல்களின் பொறுப்பையும், உரிமைகளையும் நமது உக்கிராணத்துவத்தின் முக்கிய அம்சமாகும். முதன்முறையாக மனிதன் தனது செய்கைக்கான உரிமையை எடுக்க வேண்டிய நேரத்தில், நமது முற்பிதாவாகிய ஆதாம், வெட்கமின்றி, அதைத் தன் மனைவி ஏவாளிடத்தில் தள்ளி விட்டு விட்டார். (ஆதியாகமம் 3: 11-13). உடனடியாக ஏவாள் அதை சர்ப்பத்தின் மீது போட்டு விட்டாள். செயல்கள்; தவறாகப் போகும்போது அதற்கு உரிமைகொள்ள விரும்புவது மனித இனத்தின் இயல்பு. 

சவுலும், தாவீதும் பாவம் செய்து கடவுளின் கண்டனத்திற்கு உள்ளானபோது, அவர்கள் அளித்த பதிலில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளதை அறிகிறோம். அமலேக்கியரை முறியடிக்கும்படியாகக் கர் த்தரின் கட்டளையை சவுல் நிறைவேற்றாததைக் குறித்து, சாமுவேல் சவுலிடத்தில் கேட்டபொழுது, சவுல் தன்னுடைய தவறை தன்னுடைய படைகள் மீது போட்டுவிட்டு, தன்னை நீதிமான் போலக் காட்டுகிறான் (1சாமு : 15 அதி) ஆனால் தாவீதின் குற்றத்தை நாத்தான் தீர் க்கதரிசி உணர்த்திய பொழுது தாவீது தன் குற்றத்தை ஏற்றுக் கொண்டு அதன் விளைவுகளை ஏற்றுக் கொண்டதை நாம் 2சாமுவேல் 12ம் அதிகாரத்தில் படிக்கிறோம். 

பெருநிறுவனங்கள் நிறைந்த உலகில், நமது திறமைக்கும்; அதிகாரத்திற்குட்பட்ட உக்கிராணத்ததுவத்தை உணா;வதில்லை. காரியங்கள் தவறாகப் போகும்போது அதற்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறோம். அரசு அதிகாரத்தில்  உள்ளவர்களோ, பெருநிறுவனங்களின் உரி மையாளனவர்களோ, வெகுசிலர்தான்  தங்கள் தவறை ஒத்துக் கொள்ளுகிறர்கள். நாம் எந்த இடத்தில் தவறினோம் என்பதை ஒத்துக்கொள்வது அதிலிருந்து கற்கும் திறனைப் பெற்றுக் கொள்கிறோம். 

சிந்தனைக்கு: 

செயல்கள் சரியோ, தவறோ, கிறிஸ்தவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மனதாயிருக்க வேண்டும். 

ஜெபம்: 

இயேசுவே இறைவா, என்னுடைய வேலையில் சரியான அணுகுமுறையைத்தாரும். என்னுடைய கையின் பிரயாசங்களை மற்றவர்கள் கண்டு உம்மை மகிமைப்படுத்தும்படியாக என் வேலைகளைச் செழிப்புறச் செய்யும் என்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளும் தைரியத்தைத் தந்து அதன்மூலம் கற்றுக் கொள்ள கிருபை செய்யும். ஆமென் 

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் . 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக விக்டர் ஜெயரருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
http://victorjayakaran.blogspot.in/