உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!மாதிரி
“வல்லமையுள்ள தனிஜெபத்திற்குத் தேவன் தந்த மாதிரி ஜெபம்”
கர்த்தர் கற்பித்த ஜெபம் வேதாகமத்தில் மிக அதிகமாக நினைவுகூரப்படுகிற பகுதிகளில் ஒன்று. அதிகமான பேர் இதனை மனப்பாடம் செய்துள்ளனர், அல்லது, இதைக் கேட்டவுடனே நினைவுக்குக் கொண்டுவந்து விடுவர். இயேசு அவரது சீடர்களுக்குப் போதித்தார்:
“ நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.” (மத்தேயு 6:9-13)
இன்றளவும், மிக அதிகமாக ஏறெடுக்கப்பட்ட ஜெபம் ‘கர்த்தர் கற்பித்த ஜெபம்’. ஆனால், இயேசு இந்த அற்புத வார்த்தைகளை அவரது சீடர்களுக்குச் சொன்னபோது, இவைகளை மனப்பாடம் செய்யவேண்டுமென்பதற்கும் மேலான நோக்கம் இருந்தது. நமது எல்லா வேண்டுதல்களையும் கட்டமைப்பதற்கான ஒரு முக்கிய முன்வடிவத்தைக் கொடுத்தார்.
உங்களது ஜெபவேளையைக் குறுக்குவது என்றும், ஜெபம் செய்ய முடியாதபடி உங்களுக்குள் இருக்கும் தடைகள் என்ன என்றும் ஒருகனம் யோசித்துப்பாருங்கள். ஒருவேளை, மிக எளிதாக உங்கள் கவனம் சிதறிவிடலாம் அல்லது கண்ணயர்ந்து விடலாம். அவ்வப்போது, நாம் எல்லோருமே இந்தப்பிரச்சினைகளை அனுபவிக்கிறோம்.
கர்த்தர் கற்பித்த ஜெபம், கீழ்க்கண்டதுபோல சில கூறுகளாகப் பிரித்துக் கற்றுக்கொள்ளும்போது, இந்தப்பிரச்சினைகளைத் தவிர்க்க சில யோசனைகளைத் தருகிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் ட்வெயின் 20 நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.twenty20faith.org/yvdev2/#googtrans(ta)