ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையைத்மாதிரி
ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையை மேற்கொள்ள தேவனருளிய இரண்டாவது வார்த்தை தங்கும் அறையின் வழி’ -
ஆபாசமான காட்சிகளினால் வரும் சோதனையை மேற்கொள்ள ஆண்டவர் என் உள்ளத்தில் அருளினை இரண்டாவது வார்த்தை ' அறை ' (ROOM) என்பதாகும் . இயேசுவின் கூற்றுப்படி , நாம் ஆபாச காட்சிகளை பார்க்கும்போது இதுதான் நடக்கிறது : அதாவது ,நாம் ஒரு அறையில் நுழையும்போது , நம் கண்களுக்கு தெரியும் ஓர் பெண்னின் நிர்வாணப்படமோ அல்லது கம்ப்யூட்டர் திரையில் ஆபாச அழகியை பார்த்து ரசிப்பதென்பது . அந்த பெண்ணோடு படுத்து உறங்குவது போன்றதாகும் . நான் ஏன் இவ்வாறு சொல்லுகிறேன்? மத்தேயு 5: 28-ல் இயேசு போதித்த வார்த்தையை நான் வாசித்திருக்கிறேன் :"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று". என்னுடைய மனைவி என் வீட்டில் இருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுவோம் , மறுபடியும் பிறந்த, விசுவாசியாகிய நான், ஆடையில்லாத பெண்ணுடன், என்னுடைய வீட்டிற்கு சென்று , என் அறை கதவை மூடி அவளோடு அந்த அறையில் தங்க முடியுமா ? நிச்சயமாக முடியாது . விசுவாசியாகிய நாம் ஆபாச காட்சிகளைப் பார்க்கும்போது , அந்த ஆபாச அழகிகளோடு விபச்சாரம் செய்ததாகத்தான் கருதவேண்டும் . ஆபாச காட்சிகளைக் குறித்து J. BUDZISZIEWSKI எழுதிய கருத்தை இங்கே நடைமுறை படுத்தி பார்க்கிறேன் . அவள் இவ்வாறு எழுதியுள்ளார் : விலைமாதரோடும் , ஆபாச அழகிகளோடும் , படுக்கை அறையில் பழகுவது , கணவர்களுக்கு எதோ தங்களை சூடேற்றி கொள்வதுபோல் ஆரம்பித்து முறையற்ற பாலுறவில் ஈடுபட ஏதுவாகிறது. இந்த எண்ணம் என்னை தூக்கி எறிந்த பந்தை ஒரு பெரிய சிக்ஸர் அடிப்பதற்காக மீண்டும் மீண்டும் என்னைத் தூண்டுவது போல் அமைகிறது. (இந்தியாவில் விளையாடப்படும் கிரிக்கெட் ஆட்டத்தில் அப்படி சொல்லப்படும் வார்த்தை) இந்த உணர்வு ஆபாச மோகங்களுக்காக என்னுடைய இருதயத்தில் பெரியளவில் ஊதி பறக்கவிட்டிருக்கும் பலூன்களை எண்ணிலடங்கா முறை உடைத்தெறிகிறது.
"துவக்கத்தில் சிறிதளவு ஆபாச காட்சிகள் ஒரு தீமையும் செய்யாது" என்று ஒரு பெரிய பொய்யை பிசாசு சொல்லுவான் . சீக்கிரத்தில் அந்த 'சிறிதளவு ஆபாச காட்சி ' போதாது என்ற உணர்வாகி நேற்று வரை இருந்த ஆபாச மோகம் இன்று போதாது என காண்பாய் . நேற்று கிடைத்த மலிவான சுகம் இன்று அவ்வளவாய் உன்னை பரவச படுத்தவில்லை. எனவே மேலும் மேலும் வக்கிரமான ஆபாசக்காட்சிகள் வேண்டுமென்று சொல்லுவாய் . யாரோ ஒருவர் புத்திசாலித்தனமாகச் சொன்னது போல உன்னில் பாவம் இல்லை; பாவமே நீயாகிவிடுவாய் . முன்பை காட்டிலும் அதிக ஆபாசத்தின் மேல் பசித்தாகம் உடையவனாக மாறிவிடுவாய். இப்படிப்பட்ட செய்தியை தீர்க்கதரிசி ஓசியா வாழ்ந்த நாட்களில் பாலியல் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஜனங்களுக்கு அவர் கொடுத்தார் (ஓசியா 9:1-2 - Eugene Peterson செய்திலிருந்து எடுக்கப்பட்டது )
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஆபாசமான காட்சிகளைக் பார்க்கும்படி வருகின்ற சோதனையை ஜெயிப்பதற்குரிய வழியை , வேத புத்தகத்தின் அடிப்படையில் வாசகர்கள் அறிந்து கொள்ள இது உதவியாக அமையும்:- “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” - யோவான் 8:32 .
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக டுக் ஜெயராஜிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://www.facebook.com/dukebook