வருகை: கிறிஸ்துமஸ் பயணம்மாதிரி
எதிர்பார்ப்புகளை மீறும் செயல்
தீர்க்கதரிசனத்தின் காரணமாக, யூத மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு இரட்சகரை எதிர்பார்த்திருந்தார்கள், அவர்களை விடுவித்து பூமிக்குரிய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் ஒரு ராஜாவை அவர்கள் எதிர்பார்த்தார்கள்.தங்கள் இரட்சகர் ஒரு பொதுவான குடும்பத்தில் பெத்லகேமில் ஒரு தொழுவத்தில் பிறந்தார் என்று கூறப்பட்டபோது அவர்களின் ஆச்சரியத்தையும் அவநம்பிக்கையையும் கற்பனை செய்து பாருங்கள். யூத மக்களுக்கு கிடைத்தவை அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.
ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுவது தேவனின் வேலை அல்ல. அவர் அவர்களுடைய பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிப்பதில் கவனமாக இருக்கிறார். தேவனின் நற்குணத்தை காட்டுவதற்கு இயேசு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. இயேசு மூலமாக, யூத மக்கள உணராத தேவைகளை கூட தேவன் பூர்த்தி செய்தார். அவர் ஒரு பூமிக்குரிய ராஜ்யத்தின் விரைவான செழிப்பை விட அதிகமாக வழங்கினார். அவர் தனது நித்திய ராஜ்யத்தை ஸ்தாபித்தார், இரட்சிப்பை வழங்கினார், தேவனுடன் சரியான உறவு மனிதர்க்கு ஏற்பட செய்தார், உடைந்த உலகிற்கு நம்பிக்கையைக் கொண்டுவந்தார்.
நம்முடைய காலத்தின்படி மற்றும் திட்டத்தின்படி அவர் செயல்படுவார் என்று கருதி, தேவன் மீது எத்தனை முறை நாம் எதிர்பார்ப்புகளை வைக்கிறோம்? இந்த பழக்கம் நம் விசுவாசத்திற்கு ஏற்றது அல்ல, ஏனென்றால் தேவன் நம் கால அட்டவணையில் அரிதாகவே செயல்படுகிறார், அவருடைய பதில்கள் நாம் கற்பனை செய்வதோடு பொருந்தாது.
நம்முடைய எதிர்பார்ப்புகளை கடவுள்மீது வைப்பதற்கும், அவருடைய திட்டத்தில் நம்பிக்கை வைப்பதற்கும், எதிர்பார்ப்பவர் ஆக இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவன்மீது நாம் எதிர்பார்ப்புகளை வைப்பது, ஏமாற்றம், விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு நம்மை கொண்டு செல்லலாம், நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது தேவனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நம்முடைய விசுவாசத்தை வளர்க்கும்.
தேவன் உங்கள் இதயத்தில் என்ன ஆசை வைத்துள்ளார்? இந்த கிறிஸ்துமஸ், உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை விட தேவன் எதை அதிகம் செய்ய விரும்புகிறார் என்பதை அறிந்து ஆறுதலடையுங்கள். அவர் அவைகளை நிறைவேற்ற விரும்புகிறார். அவரிடம் கேட்க நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாக தேவனால் செய்ய முடியும் என்பதில் மனதுடன் இருங்கள். தேவன் செயல்படுவார், அவருடைய செயல்முறையில் விசுவாசமாய் இருங்கள், உங்கள் விசுவாசம் வளருவதை பாருங்கள்.
ஜெபம்: பிதாவே, நான் போலும் அறியாத தேவைகளை கிறிஸ்து இயேசுவில் மகிமையாய் நிறைவேற்றுவதற்காக நன்றி. இந்த கிறிஸ்மஸிலும், நான் பார்க்க முடியாத நான் நம்புகிற விஷயத்தில் உறுதியாக இருக்க ஜெபிக்கிறேன். உம்முடைய விசுவாசத்தில் என் நம்பிக்கை அதிகரிக்க உதவுங்கள். எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டவராக நீர் இருப்பதற்காக நன்றி. உன்னுடைய காலம் சரியானது, உன்னுடைய திட்டம் சிறப்பானது. என் வாழ்வை உன்னுடைய வழியில் நடத்தும்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உண்மையிலேயே கிறிஸ்துமஸ் கதையே இதுவரை சொல்லப்பட்டத்தில் மிக சிறந்த கதை: தேவனின் உண்மை, வல்லமை, இரட்சிப்பு, மாறாத அன்பு பற்றியது. உலகத்தை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்கான தேவனின் திட்டத்தையும் அவருடைய குமாரின் பிறப்பில் நிறைவேற்றப்பட்ட வாக்குத்தத்தம் கண்டறிய அடுத்த 25 நாட்களில் ஒரு பயணத்தை மேற்கொள்வோம்.
More