குழந்தைகளின் அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடுமாதிரி
நாள் 3: லூக்கா 1: 11-20 வசனங்களை வாசிக்கவும்
சகரியாவும் அவருடைய மனைவியும் மிகவும் வயதானவர்கள், தேவன் ஒரு தேவதூதனை அனுப்பி அவருடைய மனைவிக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று சொன்னார் - இயேசுவுக்கு வழியைத் தயார்படுத்தும் ஒரு சிறப்பு குழந்தை! தேவனால் எல்லாம் கூடும்! இருப்பினும், தேவன் தனது வாழ்க்கையில் அத்தகைய அற்புதத்தை செய்ய முடியும் என்று சகரியா விசுவாசிக்கவில்லை. சகரியாவின் அவ்விசுவாசத்தினால் என்ன நடந்தது?
செயல்பாடு: காகிதத்தில் பல சொற்களை எழுதுங்கள் (விலங்குகள், விளையாட்டு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் போன்றவை நன்றாக இருக்கும்). உங்கள் குழந்தையை ஒரு துண்டு காகிதத்தைத் தேர்ந்தெடுத்து எழுதப்பட்டதைச் செயல்படுத்தி மற்றவர்கள் யூகிக்க செய்யுங்கள். உங்களால் பேச முடியாதபோது தொடர்புகொள்வது மிகவும் கடினமானதாக இருக்கிறதா? சகரியா எப்படி உணர்ந்தார் என்று நினைக்கிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
அன்புள்ள அம்மா, கிறிஸ்துமஸ் பருவம் எப்போதுமே உற்சாகம் மற்றும் குழப்பத்தில் உங்களை கடந்து செல்வது போல் தோன்றுகிறதா? இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்கலாம். இந்த கிறிஸ்துமஸில் உங்கள் குழந்தைகளுடன் கிறிஸ்துவின் அன்பின் பொக்கிஷத்தைக் கண்டறியவும்! குழந்தைகளின் அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடு ஒரு அழகான இருபத்தைந்து நாள் தியானம், ஒரு ஒருங்கிணைந்த அட்வெந்து கால கிறிஸ்துமஸ் வீடு அச்சிடத்தக்கது, இது உங்கள் குழந்தைகளின் இருதயங்களை கர்த்தரிடம் சுட்டிக்காட்டவும், இந்த கிறிஸ்துமஸ் காலத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றவும் உதவும்!
More