சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சிமாதிரி
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
துயரப்படுகிறவர்கள் ஆறுதல்படுத்தப்படுவார்கள் என்று வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவருமே துயரத்தை அனுபவிக்கிறோம். வீழ்ந்து போன உலகத்தில் நாம் வாழ்வதால் இது நிச்சயமான ஒரு உண்மையாக இருக்கிறது. வரலாற்றின் இந்தப் பகுதியில் துயரத்தைப் பூசி மெழுகி அல்லது அதை முற்றிலுமாக அலட்சியம் செய்வது சாதாரணமாக நடந்தாலும் கூட, சமூக ஊடகங்கள், வலைத்தள வியாபாரம், உணவு வகைகள் போன்றவற்றைக் கொண்டு, துயரத்தை நாம் குறைத்துவிட்டதாகவோ அவை இல்லை என்று நடித்துக் கொண்டிருக்கவோ வாய்ப்புக்கள் இருக்கின்றன. நாம் மரத்துப் போனவர்களாகவோ, நமது துயரத்தை மறைத்து வைக்கவோ விரும்பவில்லை என்பதை இந்த பாக்கிய வசனம் எனக்கு புரிதலைக் கொடுக்கின்றது. துயரப்படுதல் என்னும் பெரும் வேலையான துக்கத்தை நாம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உடைந்து போன அந்த உறவுக்காக, ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வீட்டை விட்டுப் போய்விட்ட பிள்ளையைப் பற்றி, சரி செய்யப்படவே முடியாத பொருளாதார சூழ்நிலையைக் குறித்து, நீங்கள் அனுபவித்த தவறான துர்ப்பிரயோகத்துக்காக துயரப்படிருக்கிறீர்களா?
துயரப்படுவது நமக்கு அவசியமானது ஏனென்றால் உங்கள் துயரம் உணர்வற்ற காதுகளில் விழாமல் நம்மை ஆறுதல் படுத்துவதாக வாக்குத் தத்தம் கொடுத்த கர்த்தரால் கேட்கப்பட்டிருக்கிறது என்ற உறுதியை இந்த பாக்கியவசனம் நமக்குக் கொடுக்கின்றது.
நமது துயரத்தையோ, கேள்விகளையோ, கோபத்தையோ கூட கர்த்தரால் கையாள முடியும். இப்படிப்பட்ட இருளான தருணங்களில் தான் அவர் நம்மைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்கிறார். ஆனால் அதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.
துயரம் ஒரு போதும் நம்மை அடையாளப்படுத்தாது. அது, கர்த்தர் நாம் எப்படிப்பட்ட நபராக மாற வேண்டும் என்று விரும்புகிறாரோ அந்த நபராக நம்மை செதுக்கி எடுக்கும்!
நமக்காகத் துயரப்படுவது முக்கியமானது. ஆனால் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் தேவைகளுக்காகவும் நாம் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு நாட்டு மக்களோ, தீர்க்கதரிசியோ தங்கள் பாவங்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் துயரப்பட்ட சம்பவங்கள் பலவற்றை வேதாகமம் பதிவு செய்துள்ளது. ஊழல், வெறுப்பு, தீமை போன்றவைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கர்த்தரை நேசிக்கிறவர்களாகிய நாம் இந்த உலகத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்காக வருத்தப்படுகிற உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவை நம்மைத் தொடவில்லை என்பதற்காக அலட்சியம் காட்டுகின்றவர்களாக இருக்கக் கூடாது. நாம் கிறிஸ்துவைப் போல இருக்க வேண்டும் என்றால் துயரப்படுகிறவர்களோடு அழுகிறவர்களாகவும் அவர்களது பாடுகளுக்கு நிவாரணமாக நம்மால் முடிந்தவற்றை செய்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
உங்களது காயங்களைக் கர்த்தருக்கு முன்பாகத் திறந்து வைக்க இன்று நீங்கள் நேரத்தை ஒதுக்குவீர்களா? சகல ஆறுதல்களின் கர்த்தருக்கு எதுவும் மிகவும் சிக்கலானதாகவோ, வசதியில்லாததாகவோ, அசிங்கமானதாகவோ இருக்க முடியாது. தேவையுடன் உங்களைச் சுற்றியிருக்கும் மக்களுக்காக உணர்வுள்ளவர்களாக இருக்க உங்களை அனுமதிப்பீர்களா? யாரோ ஒருவரது ஜெபத்துக்கு நீங்கள் பதிலாக இருக்கக் கூடும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக நாங்கள் ஆர் சீயோனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.wearezion.in