பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்மாதிரி
ஒற்றுமைக்கான அழைப்பு
மற்ற கிறிஸ்தவர்களிடம் இருந்தும் திருச்சபையின் மற்ற பிரிவினரிடம் இருந்தும் நம்மைப் பிரிக்கும் தடைகளும் எல்லைகளும் யாவை? அதைப் பற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புவார்? உலகம் முழுவதும் இருக்கும் காயப்பட்டிருக்கும், இயேசு தேவைப்படும்மக்களுக்கு இது எப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்?
கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்கும்போது இந்த உலகம் இயேசுவைத் தெளிவாகப் பார்க்கின்றது. நமது விசுவாசத்தின் மையமாக ஒற்றுமை இருக்கிறது. நாம், பிதா, குமாரன், பரிசுத்தாவியானவர் ஆகிய ஒரே கர்த்தரை விசுவாசிக்கிறோம். திரித்துவத்தில் ஒற்றுமை இருக்கிறது. ஆனால் பிரிவினை என்பது ஆதாமும் ஏவாளும் பாவத்தில் விழுந்ததில் இருந்து ஒரு சாபமாக இருந்து கொண்டிருக்கிறது.
யோவான் 17 ஆம் அதிகாரத்தில் இயேசு முக்கியமாக எதற்காக ஜெபித்தார்? ஒற்றுமைக்காக. அவர் உலகமானது விசுவாசிப்பதற்காக ஒற்றுமை வேண்டும் என்று ஜெபித்தார்.அதாவது, திருச்சபையானது ஒற்றுமையாக இல்லை என்றால்,உலகம் விசுவாசிக்காது. நாம் மக்களுக்கு நற்செய்தி செய்ய முயற்சி செய்தோம் என்றால், நாம் ஒற்றுமையாக இல்லை என்றால் அவர்கள் விசுவாசிக்கப் போவதில்லை. கிறிஸ்தவரல்லாத ஒரு நண்பர் எனக்கு இருக்கிறார். அவர் என்னிடம் இப்படிச் சொன்னார், “கத்தோலிக்கர்களும் ப்ராட்டஸ்ட்டாண்டுகளும் எனக்குப்பார்க்க ஒன்று போலத் தான் இருக்கிறார்கள். உங்கள் இருவருக்குமே ஆலயங்கள் இருக்கின்றன. இருவருக்குமே கர்த்தரின் ஜெபம் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடும்போது - அதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை.” அவர்கள் நம்புவது என்ன என்பதைப் பற்றி அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாதபோது அவர்களது விசுவாசத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகவே உலகம் விசுவாசிப்பதற்கு ஏற்றவிதமாக நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இயேசு ஜெபித்தார். ஏனென்றால் பிரிவினை மக்களை அலுத்துப் போகச் செய்யும், விசுவாசிக்க விடாமல் தடுக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் ஒற்றுமை என்பது மிகவும் கவர்ச்சியானது, அது திருச்சபையில் இருக்க வேண்டியது.
ஒரு நாளில் கர்த்தரின் சிங்காசனத்தின் முன் திருச்சபைக்குள் பரிபூரணமான ஒற்றுமை காணப்படும். அதை நாம் வெளிப்படுத்தல் 7:9இல் பார்க்கலாம். அந்த வசனம் இவ்வாறாகச் சொல்கிறது, ‘இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.’ வித்தியாசம் என்பது ஒழிக்கப்படவில்லை, அது கொண்டாடப்படுகிறது. வேறுபாடுகள் அழிக்கப்படவில்லை; அது கொண்டாடப்படுகிறது, அது அழகாக இருக்கிறது. இயேசு நமக்கு இவ்வாறாக ஜெபிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார், “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10). ஆகவே, பரமண்டலத்தில் கர்த்தரின் சித்தம் என்ன? அது ஒற்றுமை. சிங்காசனத்தின் முன் ஒன்றாகச் சேர்ந்து ஆராதித்தல். ஆகவே இது தான் திருச்சபையின் பணியாகும் - திருச்சபையின் பல பிரிவுகளுக்குள் ஒற்றுமை. வெவ்வேறு சபைப்பிரிவுகளுக்குள், வெவ்வேறு திருச்சபைகளுக்குள் ஒற்றுமை. எந்த அளவுக்கு உலகத்தில் இருக்கும் திருச்சபையானது பரமண்டலத்தில் இருக்கும் திருச்சபையைப் போல வேகமாக மாறுகின்றதோ அந்த அளவுக்கு அது சிறப்பானதாக இருக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கர்த்தரின் குரலை நீங்கள் எப்படிக் கேட்பீர்கள்? உலகப் பிரச்சனை காலத்தில் கர்த்தர் என்ன சொல்வார்? இந்த நான்கு நாள் திட்டத்தில், ஆல்ஃபாவின் நிறுவனர் நிக்கி கம்பெல் அவருக்கு கர்த்தரின் குரலைக் கேட்க உதவியாக இருந்த எளிய பயிற்சிகளை சொல்வதன் மூலம் துவங்குகிறார். கர்த்தர் நாம் பதிலளிக்க வேண்டும் என்று அழைக்கின்ற மூன்று முக்கிய சவால்களையும் தொடர்ந்து சொல்கிறார்: திருச்சபையில் மாபெரும் ஒற்றுமை, நற்செய்தி சொல்வதில் முன்னுரிமை மற்றும் தினசரி பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருத்தல்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய ஆல்பாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.leadershipconference.org.uk/