நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
உலகத்தன்மை
நம்மை நாமே வெறுமையாக்குவதில் இருந்து இந்த பயணத்தை நாம் தொடங்குகிறோம். வேதம் சொல்லுகிறது, ஒரு கிறிஸ்தவனாக, இயேசுவின் இரத்தத்தால் வாங்கப்பட்ட ஒரு நபராக, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு நபராக இருக்கும் நாம், இவ்வுலகத்தின் காரியங்களை நேசிக்க கூடாது. இன்று போதிக்கப்படும் அனேக காயங்களுக்கு இது நேர் எதிரானது என்று நான் நன்றாக அறிவேன், ஆனால் இதை நாம் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும், கிறிஸ்துவை பின்பற்றும் ஒரு நபராக, நம்மை நாமே வெறுத்து, சிலுவையை எடுத்துக்கொண்டு, இயேசுவை பின்பற்ற வேண்டும்.
ரோமர் 12ல் அப்போஸ்தலர் பவுல் நாம் இந்த உலகத்திற்கு தக்க வேஷம் தரிக்க கூடாது என்றும், மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக வேண்டுமென்று கூறுகிறார், இதனால் தேவனின் நல்ல, பரிபூரணமான திட்டத்தை நாம் நிரூபிக்கக் கூடும். புதிதாகிறதினாலே என்னும் சொல், அனக்கய்நோஸிஸ் என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது, புதுப்பித்தல் என்னும் அர்த்தமுடையது. இதனை மையப்படுத்தினால், நமது பழைய உலகத்துக்கு ஏற்ற சிந்தனைகள், நடக்கைகள், வாழ்க்கை முறை எல்லாவற்றையும் ஒழித்து, அவ்விடத்தை தேவனுக்கேற்ற காரியங்களால் நிரப்ப வேண்டும்.
1யோவான் 2:15-20ல், வேதம் இந்த உலகத்தை நேசிப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கிறது, உலக ஆசை நம்மை எங்கே கொண்டு செல்லும் என்பதையும் சொல்கிறது. உலக ஆசை நம்மில் இருந்தால், பிதாவின் அன்பு நம்மிடத்தில் இல்லை என்று வசனம் சொல்லுகிறது. உலகமும் அதன் ஆசைகளும் எவ்வளவு நிலையற்றது என்பதையும் சொல்லுகிறது. ஆனால் தேவ சித்தம் செய்வோர் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
இந்த 21 நாள் திட்டத்தை ஆரம்பிக்கும் வேளையில், நம்மில் இருக்கும் உலக ஆசைகளை களைய கடினமாக முற்பட வேண்டும். நம்மால் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது – தேவன் அல்லது உலகம் இவ்விரண்டு ஏதாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேவனை தெரிந்த உடனே, நம்மில் இருக்கும் தெய்வத்தன்மை அல்லாத உலக ஆசைகளை களைய வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More