மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்மாதிரி

மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்

7 ல் 5 நாள்

நீங்கள் மனஅழுத்தத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமா?

பானு தன்னுடன் ஒருசேரப்பிறந்த சகோதரியை இழந்துவிட்டாள். வேதனை, கண்ணீர் மற்றும் துயரமான பிரிவு அவளை மனஉளைச்சல்நிறைந்த வாழ்க்கைக்குள் மூழ்கடித்தது. தன் சகோதரி இல்லாவிட்டாலும், தனக்கு உதவி செய்யும் மற்றும் ஆறுதலளிக்கும் ஆண்டவர் தன் பக்கத்தில் எப்போதும் இருக்கிறார் என்பதையும், வாழ்க்கையை தொடர்ந்து வாழவேண்டியது மிகவும் அவசியமானது என்பதையும் அவள் உணர வேண்டும் என்று இயேசு விரும்பினார்...

ஏதோ ஒரு வகையில், பானுவின் சூழலைப் போன்ற ஒரு சூழலில் நீங்கள் இருப்பதாக உணர்கிறீர்களா? ஆம், சில நேரங்களில் வாழ்க்கைமிகவும் கடினமாகத்தான் உள்ளது. சோதனைகள் மிகக்கொடூரமாகநம்மைத் தாக்குகின்றன. அதுமட்டுமின்றி, கடந்த நாட்களில் நடந்தவைகளை மனதில்வைத்துக் கொண்டு, நிகழ்காலத்தில் மனஉளைச்சளிலேயே வாழ்ந்து பின்வாங்கிப் போகிற ஆபத்தான சூழலுக்குள் நாம் தள்ளப்படலாம். ஒருவேளை எதிர்காலத்தைப் பொறுத்தவரை, நாம் இருளை மட்டுமே பார்க்கக்கூடிய சூழல் தற்போது காணப்படலாம்...

கிறிஸ்துவில் அன்பிற்குரியவரே, சில சமயங்களில் மனஉளைச்சலுக்கான நியாயமான காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், அதேநிலையில் தொடர்ந்து இருப்பதாலும், மனஉளைச்சலில் தொடர்ந்து வாழ்வதாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

நீங்கள் என்னிடம் இப்படியாகக் கூறலாம், “ எரிக், ... செய்வதை விட சொல்வதுமிக எளிது! இந்த மனஉளைச்சலை உணருவதற்கு எனக்குபல சரியான காரணங்கள் இருக்கின்றன.நான்இருக்கிற இடத்தில் நீங்கள் இல்லை."

நான் உங்கள் இடத்திலோ அல்லது பானுவின் இடத்திலோ இல்லை என்பது உண்மைதான்…ஆனால், இன்னும்… விரக்தியடைந்த வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. விரக்தி நமக்குக் கண்ணியாக இருப்பதை நான் உணர்கிறேன். இது ஒரு சிறைச்சாலை, துன்பத்தை அனுபவிக்கும் இடம். நீங்களோ அல்லது நானோ அதற்காக உருவாக்கப்படவில்லை. வேதனை மற்றும் மனஉளைச்சலை வேறுபடுத்தி அறிவது அவசியம்.

மனஉளைச்சலைத் தக்கவைத்து அதை நம்முடைய வாழ்க்கையில் வளரச்செய்வது, உண்மையிலேயே ஆண்டவர் நமக்காக வைத்திருக்கிற விருப்பத்தை எதிர்க்கிறது. நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், நம்முடைய இருதயங்கள் ஆறுதலடைந்து, அனைத்து சுமைகள் மற்றும் பாரங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதனால்தான், நான் ஏதையாவது பாரமாக உணரும்போது, ​​நான் அதைக் கர்த்தர் மீதுவைத்துவிடத் தீர்மானிக்கிறேன். ஏனென்றால், அவருடைய உதவியில்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது! சில நேரங்களில், என்னால் மட்டுமே ஏமாற்றத்தை சமாளிக்க முடியாது. அதனால் நான் ஆண்டவரிடத்திற்குத் திரும்புகிறேன். அதையே நீங்களும் செய்யவேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன்...

ஆண்டவருடைய வார்த்தை கூறுகிறது, "...அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;" (2 கொரிந்தியர் 12:10)

இயேசுவில், நீங்கள் பலவீனமாக இருக்கும்போதுதான் நீங்கள் பலமாக இருக்கிறீர்கள்! ஆண்டவருக்கு முன்பாக உங்கள் பலவீனத்தை ஒத்துக்கொள்வதன் மூலம், அவர் உங்களுக்குள் செயல்பட அனுமதிக்கிறீர்கள். அவர் உங்களை மனஉளைச்சல் மற்றும் அதன் எதிர்மறைவிளைவான, நாசமோசங்களிலிருந்து விடுவிப்பார். ஆம், ஆண்டவர் விரும்புவதெல்லாம், அவர் பானுவுக்கு செய்தது போல, உங்கள் பாரத்தை உங்களைவிட்டு நீக்கி, உங்களை விடுவிப்பதேயாகும்.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

மனஅழுத்தத்தின் மீது ஜெயங்கொள்ளுங்கள்

உன் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை என்று நினைக்கிறாயா? உன்னை பற்றி நினைக்கவோ கண்டுகொள்ளவோ யாருமில்லை என்று உன் உள்ளத்தில் தோன்றுகிறதா? நீ வாழ்க்கையில் தோற்றுப்போனதாக எண்ணுகிறாயா? நீ என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில் முடிவதுபோல் இருக்கிறதா? எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லையா? அல்லது தாமதமாகிறதா? இனி நான் வாழ இயலுமா அல்லது வாழ்ந்து என்ன அர்த்தம் என்று யோசிக்கிறாயா? இந்த திட்டம் உனக்கானது. ஆம் அன்பரே நான் குறிப்பிட்ட அனைத்தும் மன அழுத்தத்தின் (depression) விளைவுகள். ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே இந்த மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு பரிபூரண விடுதலை அளிக்க முடியும். மேலும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்து உங்களை மேன்மையாக வைக்க ஆவலாய் இருக்கிறார். வாருங்கள் வேதாகமத்தின் அடிப்படையில் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் வழிகளை ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/

சம்பந்தப்பட்ட திட்டங்கள்