அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?மாதிரி
சிரி, சிரி, மறுபடியும் சிரி!
ஆஹா, விடுமுறை! பொறுக்க முடியாமல் காத்திருக்கிறோம்... கடற்கரைக்கு சென்றாலும் சரி, ஏதேனும் மலைப்பகுதிக்கு சென்றாலும் சரி, அல்லது வீட்டிலிருந்தே ஓய்வெடுப்பதாக இருந்தாலும் சரி, நம்மை புதுப்பித்துக்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் விடுமுறைகள் சிறந்த வழியாகும்.
இருப்பினும், பலர் தங்கள் விடுமுறை நாட்களைப் பயன்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, சிலருக்கு, வேலையில் பின்தங்கிவிடுவோம் என்ற கவலை அவர்களின் ஓய்வைத் திருடுகிறது.
நான் ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், நம் சிரிப்பை (புன்னகையை) புறக்கணிக்கப்பட்ட விடுமுறை நாளுடன் ஒப்பிடலாம் என்று நான் நம்புகிறேன்: இது பயன்படுத்தப்படாத ஒரு நன்மை. எதிர்பாராதவிதமாக, சிரிப்பு என்பது பலர் முழுமையாக பயன்படுத்தாமல் புறக்கணிக்கும் ஒரு அறிய வாய்ப்பாக இருக்கிறது. இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தூரத்தில்தான் உள்ளது - நாம் தேர்வு செய்தால் அதை அனுபவிக்க முடியும் - "ஆனால் அது, ஆண்டவர் நமக்கு கொடுத்த, நாம் பெரும்பாலும் புறக்கணிக்கும், கருவிகள் நிறைந்த ஒரு கருவிப்பெட்டிக்குள் உள்ளது."
ஆண்டவர் நமக்கு சிரிக்கும் திறனைக் கொடுத்தார் என்றால், அது காரணமின்றி இல்லை. வருத்தம், மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவற்றுக்கு எதிரான போரில் சிரிப்பு இன்றியமையாதது. அதனால்தான் ஆண்டவருடைய வார்த்தை அறிவிக்கிறது:
“மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.” (நீதிமொழிகள் 17:22)
நான் ஒன்றைப் பரிந்துரைக்க விரும்புகிறேன்: சிரிக்க ஏன் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது?
பகலில் நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திக்க ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கு. வேடிக்கையான மற்றும் ஊக்கமளிக்கும் நபர்களுடன் நேரத்தை செலவிடு: அவர்களின் நகைச்சுவையும் நேர்மறையும் தொற்றிக்கொள்ளக்கூடியது.
உன் சிரிப்பைத் திருடி, உன் வாழ்க்கையில் அழுத்தத்தைக் கொண்டு வந்த வேதனையான சூழ்நிலைகளை நீ சந்தித்துக்கொண்டிருக்கிறாய் என்றால், அவற்றை நீயாகவே கடந்து செல்ல முயற்சிக்காதே. ஆண்டவரின் உதவியை நாடு, அவருடைய மகிழ்ச்சி மீண்டும் உன் இதயத்தில் இடம் பெற மன்றாடு. அவர் உனக்கு கொடுக்க விரும்புகிறார், அவரால் கொடுக்க முடியும், "...சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும்.." அவரால் முடியும்... (ஏசாயா 61:3)
ஆண்டவருடைய வார்த்தை நாம் உலகத்தின் ஒளி என்று கூறுகிறது (மத்தேயு 5:14ஐ பார்க்கவும்). உன்னுடைய புன்னகைதான் அந்த விளக்கை ஒளிரவைக்கும் திரியாக இருக்கிறது!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக XXக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=overcomestress