மன்னிப்புமாதிரி
![மன்னிப்பு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F37355%2F1280x720.jpg&w=3840&q=75)
மன்னிப்பு உன்னை விடுவிக்குமா?
மன்னிப்பு என்பது கிறிஸ்தவர்களாகிய தங்கள் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய, சிரமம் நிறைந்த இடையூறாக இருந்திருக்கிறது என்று பலர் என்னிடம் கூறியுள்ளனர். மற்றவர்களை அல்லது தங்களை தாங்களே மன்னிப்பது அவர்களுக்கு கடினமாக இருப்பதாக அவர்கள் பகிர்ந்துள்ளனர்…
ஒருவேளை உனக்கும் இப்படியா? அல்லது உனக்கு தெரிந்த ஒருவருக்கா?
மன்னிப்பது ஒரு தெய்வீக செயல். நான் அதை உண்மையாக நம்புகிறேன். ஆண்டவர்தான் மன்னிப்பைப் படைத்தவர்.
இது என்னை ஒரு வழக்கமான வசனத்தை நினைவுகூர வைக்கிறது, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:16)
இயேசுவின் மரணத்தால் நமக்கு மன்னிப்பு கிடைத்தது. ஏனெனில் அவருடைய இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டது (எபிரெயர் 9:22-28ஐப் படிக்கவும்). நம் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்பதற்காக ஆண்டவர் கொடுத்தார். தனது மகனை பலிக்கொடுத்தார். மன்னிப்பு என்பது இவைகளும்கூட : கொடுப்பது, சரணடைவது, விடுவது, சில சமயங்களில் தியாகம் செய்வது.
இது எளிதானது அல்ல, அதற்கு ஒரு விலை உள்ளது. ஆனால் ஒருவரை அல்லது உன்னையே மன்னிப்பது சுதந்திரத்தை வெளியிடும் ஒரு பெரிதான செயலாகும். நீ மன்னிக்கும்போது மனக்கசப்பின் சுமை நீங்குகிறது.
நீ என்னுடன் ஜெபிக்க விரும்புகிறாயா?...“அப்பா, நீர் இயேசுவைக் கொடுத்ததற்காக நன்றி. இந்த அன்பின் பரிசு உண்மையான மன்னிப்பை நாங்கள் அனுபவிக்க அனுமதிக்கிறது என்பதற்காக நன்றி. இன்று, நான் மன்னிக்க, உண்மையாக மன்னிக்க எனக்கு உதவும். விடுவிக்க, விட்டுவிட, சரணடைய, எல்லா வெறுப்பு மற்றும் பகைமையை கைவிடவும் எனக்கு உதவும். என் இதயம் சுதந்திரமாகவும் லேசாகவும் இருக்கட்டும். இப்போது என்னைச் சூழ்ந்திருக்கும் உம்முடைய சமாதானத்திற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![மன்னிப்பு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F37355%2F1280x720.jpg&w=3840&q=75)
சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=forgiveness