அடுத்து என்ன: மாணவர் பதிப்புமாதிரி

What's Next: Student Edition

7 ல் 3 நாள்

திரித்துவம்

திரித்துவம் என்பது தேவனின் நபர்களை குறிக்கும் ஒரு கருத்து. கடவுள் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர். கடவுள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியர். அனைவரும் கடவுள். கடவுள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியர் ஆகிய மூன்றும்.

மனிதர்களை கண்காணிப்பவர் பிதாவானவர். இதற்கான ஆதாரத்தை வேதாகமத்தின் பழைய ஏற்பாடு முழுவதிலும் காண்கிறோம். புதிய ஏற்பாட்டில், தேவன் பரலோகத்திலிருந்து மனித வடிவத்தில் இயேசுவாக இறங்கி வந்தார். இவர் தேவக்குமாரன். தேவக்குமாரனாகிய இயேசு முழுமையாக மனிதன் மற்றும் முழுமையாக கடவுள். நம் பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பதற்கு அவர் பொறுப்பாக இருந்தார். சுவிசேஷ நூல்களில் (புதிய ஏற்பாட்டில் உள்ள முதல் நான்கு நூல்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான்) இயேசுவின் வாழ்க்கை காணப்படுகிறது. அதன் பின் வருபவர் தேவனின் மூன்றாம் நபராகிய பரிசுத்த ஆவியானவர். இயேசு சிலுவையில் நமக்காக செய்ததை நாம் ஏற்றுக்கொள்ளும் போது, பிதாவாகிய தேவன் நமக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவரை கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம் வழிகாட்டி மற்றும் தேற்றரவாளன். அவர் நம் சார்பாக தேவனிடம் பரிந்து பேசுகிறார். இயேசு மரித்து, உயிர்தெழுந்து பரலோகத்திற்கு சென்ற பின், முதல் திருச்சபையில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தப்படுகிறார் (புதிய ஏற்பாட்டின் சுவிசேஷ நூல்களுக்கு பின்).

இது புரிந்துக்கொள்வதற்கு கடினமான கருத்தாக இருக்கலாம். தேவன் மிகவும் பெரியவராகவும் எளிதற்றவராகவும் இருப்பதால் அவரை முழுமையாக நம்மால் எப்போதும் புரிந்துக் கொள்ள முடியாது. இதை மட்டும் தெரிந்துக் கொள்ளுங்கள்: பிதாவாகிய தேவன் உங்களை கண்காணிக்கிறார், இயேசு உங்களுக்காக மரித்தார், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறார் , உங்களை நடத்துகிறார்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

What's Next: Student Edition

தேவன் யாரென்றும் அவர் உங்களை யாராக இருக்க படைத்திருக்கிறார் என்றும் இந்த 7 நாள் அடிப்படை திட்டத்தில் நீங்கள் தேவ வார்த்தையை திறப்பதன் மூலம் கண்டறியவிருக்கிறீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.