The Chosen - தமிழில் (பாகம் 4)மாதிரி
காலம் சமீபித்திருக்கிறது
யோவான் ஸ்நானகர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அவருடைய ஊழியத்தில் ஏதோ ஒரு விசேஷத்தை நான் கண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவருடன் ஊழியத்தில் இணைந்தேன். மகிழ்ச்சி, அபரிவிதம் அல்லது சோகம், பற்றாற்குறை என்று எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் அவருக்கு மிகவும் விசுவாசத்துடன் ஒத்துழைக்கும் ஒருவராக இருந்தேன்.
எவ்வாறாயினும், யோவான் ஸ்நானகர், தான் மேசியா அல்ல என்பதை எப்போதும் ஒப்புக்கொண்டிருக்கிறார், மேலும் மேசியாவின் வருகைக்காக வழியை ஆயத்தப்படுத்தும் ஒரு சிறப்பு பணி அவருக்கு இருப்பதாக கூறினார் (யோவான் 1:19-28). சில நாட்களுக்கு முன்புதான், நாசரேத்தின் இயேசுவே மேசியா என்பதை யோவான் ஸ்நானகர் எங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அடுத்து நடந்தது சம்பந்தப்படுத்திக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தது! இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற வந்த நாளையும், பரலோகம் திறக்கப்பட்டதையும், பரிசுத்த ஆவி புறாவைப் போல அவர் மீது இறங்குவதை யோவான் பார்த்ததையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
ஆம், இயேசுவின் புகழ் எங்கும் பரவியது… கானாவூரில் நடந்த திருமணத்தில் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது, திமிர்வாதத்தால் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தியது, மகதலேனா மரியாவின் விடுதலை என அவர் செய்த அற்புதங்களை நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். நிக்கொதேமு என்ற ஒரு பரிசேயன் கூட தன்னிடம் வந்ததாக யோவான் எங்களிடம் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு என் நல்ல நண்பன் அந்திரேயா செய்ததைப் போல நானும் இயேசுவைப் பின்பற்ற விரும்பினேன், ஆனால் யோவான் ஸ்நானகர் அப்படி சொல்வதற்கு முன் எந்த அடியும் எடுத்து வைக்க வேண்டாம் என்று என் இருதயத்தில் ஒரு தீர்மானம் வைத்திருந்தேன். ஆண்டவரின் கட்டளையின்படியே நான் யோவானுடன் இருந்தேன், மேலும் ஆண்டவர் விரும்பும் வரை அவருக்கு சேவை செய்ய விரும்பினேன். நான் ஆண்டவரை விட முந்தியோ அல்லது எதையும் கட்டாயப்படுத்தியோ செய்ய விரும்பவில்லை.
நல்ல செய்தி என்னவென்றால், அந்த நாள் இறுதியாக வந்துவிட்டது! யோவான் என்னை இயேசுவிடம் சேர்ந்து கொள்ளும்படி கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். நான் வடக்கு இஸ்ரவேலில் உள்ள பாசான் மாகாணத்திற்குச் சென்றேன், சில நாட்கள் நடைப்பயணத்திற்குப் பிறகு, இறுதியாக இயேசுவையும் அவருடைய சீடர்களையும் சந்தித்தேன். அந்திரேயாவை மீண்டும் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!
நான் இயேசுவிடம் பேசியபோது, உடனடியாக ஒரு விசேஷமான நெருக்கத்தை உணர்ந்தேன்— இப்போது அவரைப் பின்தொடர்ந்து அவருடைய சீடர்களுள் ஒருவரானதால் நான் மகிழ்ச்சியில் நிரம்பினேன்! என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. சொல்லப்போனால், பிலிப்பியின் செசரியாவைக் கடந்து செல்லப் போகிறோம் என்பதை அறிந்து, என்னுடைய ஒரு நல்ல நண்பனை இயேசுவைச் சந்திக்க அழைத்தேன். நாளை அவர் தனது கதையை உனக்குச் சொல்வார். ;-)
ஒவ்வொரு நாளும் மேசியாவைப் பின்தொடரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என் வாழ்க்கை முன்பை விட அதிக அர்த்தமும் நோக்கமும் கொண்டதாக மாறியது.
என் பெயர் பிலிப்பு, நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.
குறிப்பு: அன்பரே, பிலிப்பைப் போலவே, வாழ்க்கையில் முக்கியமான படிகளை எடுப்பதற்கு முன் எப்போதும் ஆண்டவரின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பது அவசியம். அதே நேரத்தில், இயற்கைக்கு அப்பாற்பட்ட செய்தி என்னவென்றால், நீ இயேசுவைப் பின்தொடர காத்திருக்க வேண்டியதில்லை - அவர் ஏற்கனவே உனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு அழைப்பைக் கொடுத்துள்ளார்! அவர் உன்னுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்க விரும்புகிறார் மற்றும் உன் வாழ்க்கைக்கு ஒரு நித்திய நோக்கத்தை வழங்க உன் தினசரி பயணத்தில் வழிகாட்ட விரும்புகிறார். இந்த நாட்களில், அவருடைய பிரசன்னத்தை மிகவும் நெருக்கமாகவும், உன் எல்லா அடிகளிலும் அவருடைய வழிகாட்டுதலையும் அனுபவிப்பாயாக.
நீ ஒரு அதிசயமாக விளங்க தெரிந்துகொள்ளப்பட்டாய்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilchosen