அவரே உன் தஞ்சம்!மாதிரி

அவரே உன் தஞ்சம்!

4 ல் 2 நாள்

கன்மலையின் வெடிப்பிலே தங்கியிரு

“பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவையாவன: …. சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்…” (நீதிமொழிகள் 30:24-28)

குழிமுசல் என்ற பாலூட்டி வகையைச் சார்ந்த பிராணி சாதாரண முயலை விட சிறிதளவு பெரியது. பெரும்பாலும் அதைக் கழுகுகள் வேட்டையாடும். இந்த அபாயத்தை எதிர்கொள்ள இந்த சிறிய பிராணிக்கு திராணி கிடையாது. ஆகவே அதை பாதுகாத்துக் கொள்ள, பாறைகளுக்குள் தன் வீட்டைக்கட்டி, பெரும்பாலும் அதன்கீழ் தங்கியிருக்கும். ஆண்டவருடைய படைப்பு நமக்கு ஏராளமானவற்றை கற்றுக்கொடுக்கிறதல்லவா?

ஏதாவது நோய், துன்புறுத்தல் (வீட்டில் அல்லது வேலையில்), அநீதி, அநியாயம், வீணான பழி அல்லது இப்படிப்பட்ட வேறு எதையாவது நீ எதிர்கொண்டிருப்பதால் நீ உதவியற்று பெலன் இல்லாமல் இருப்பதுபோல் உணரலாம். உன் மகிழ்ச்சியை திருட அல்லது உன் சமாதானத்தை குலைக்க முயற்சிப்பது எதுவாக இருந்தாலும், நீ கிறிஸ்துவினுடையவள்/ கிறிஸ்துவினுடையவன் என்று அறிந்திருப்பதே மிகவும் முக்கியமானது. இயேசுவே உன் கற்பாறை, வல்லமையான நிழல், உன் ரட்சகர், உன் பாதுகாப்பு, உன் ஜீவன்!

நீ கன்மலையின் வெடிப்பில் இருக்கிறாய், இயேசுவுக்குள் மறைந்திருக்கிறாய். பின்வரும் உண்மைகளின் நிமித்தமாக:

  • புயல் வீசி கடல் கொந்தளித்தாலும், அது அடங்கிவிடும். (சங்கீதஜம் 107:29ஐ பார்க்கவும்)
  • எதிரியானவன் கெர்ஜித்தாலும், அவன் ஓடிவிடுவான். (யாக்கோபு 4:7ஐ பார்க்கவும்)
  • உனக்கு எதிராக யுத்தம் எழுந்தாலும், நீ பயமின்றி இருப்பாய். (சங்கீதம் 27:3ஐ பார்க்கவும்)

உண்மை என்னவென்றால் இயேசு உனக்காக போராடுகிறார். அவர் இருக்கிறார், அவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார். அவருடைய பிரசன்னத்தை உன் மறைவிடமாக்கிக்கொள். இன்று அவர்மீது உன் நம்பிக்கையை வை!

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

அவரே உன் தஞ்சம்!

உலகம் உருவான காலத்திலிருந்து தொற்றுப்பரவல், இயற்கை சீற்றங்கள், போர்கள் அல்லது போரின் வதந்திகள் எங்கும் எப்போதும் இருந்து வருகின்றன... ஆனால் உனக்கு, நித்திய தெய்வீக அடைக்கலம் உண்டு. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டவருக்குள் அடைக்கலம் புகுவதை பற்றியும் அவரை நம் வாசஸ்தலமாக மாற்றிக்கொள்வதை பற்றியும் கற்றுக்கொள்ள போகிறோம். ஆண்டவரின் வார்த்தையிலிருந்து உனக்கு ஆழமான வெளிப்பாடுகள் கிடைத்து உன் ஆத்துமா ஊக்குவிக்கப்பட்டு திருப்தியடைய வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=dwellingplace