புதையல் வேட்டை 2மாதிரி

புதையல் வேட்டை 2

5 ல் 1 நாள்

நியாயமில்லாத ஆனால் வியக்கத்தக்க இடமாற்றம்

பிடி

அழகில்லாத வாத்து கதை உனக்கு தெரியுமா? வாத்து பண்ணையில் பொரித்த ஒரு முட்டையின் கதை அது. இந்த பறவை மிகவும் அசிங்கமாக இருப்பதாக அங்கிருந்த எல்லா வாத்துகளும் எண்ணியது. ஆனால் கடைசியில் இந்த அசிங்கமான வாத்து ஒரு சாதாரணமான வாத்து இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அது ஒரு வியக்கத்தக்க, வலிமை வாய்ந்த அன்னப்பறவையாக மாறியது.

இந்தக் கதை நம்முடையதை போன்றதுதான். நாம் ஒரு சாதாரணமான அழகில்லாத வாத்தை போல இருக்கிறோம். ஆனால் இயேசு நம்மிடம் கடந்து வருகிறார், நாம் முற்றிலுமாக மாற்றமடைகிறோம். இயேசு சூழ்நிலையை திருப்பிப் போடுகிறார் - வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்:

படி

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
2 கொரிந்தியர் 5:21

பார்

இந்த வசனத்தின் மூலம், ஆண்டவர் உன்னை எப்படி பார்க்கிறார் என்று நீ நினைக்கிறாய்? சரியாக சொன்னாய், நாம் நன்றாக இருக்கிறோம் என்று மட்டும் பார்க்காமல், பிழையின்றி, குற்றமின்றி நாம் இருப்பதாகவும், நம்மிடம் ஒரு தவறும் இல்லை என்பதுபோலவும் அவர் காண்கிறார். ஏன் அவர் உன்னை அப்படி பார்க்கிறார்? ஏனென்றால் இயேசு, ஏதோவொரு காரணத்திற்காக, நியாயமில்லாத ஆனால் வியக்கத்தக்க இடமாற்றத்தை செய்தார். அவருடைய தூய்மையை உன்னுடைய பாவங்களுக்கு பதிலாக இடம் மாற்றினார்.

உன்னுடைய பாவத்தை ஆண்டவர் எப்படி பார்க்கிறார் என்பதை நீ நினைத்துப் பார்க்கும் போது உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகிலேயே மிகவும் அழுக்கான இடமான சாக்கடையில் தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த ஒரு நபரைப் பற்றி எண்ணிப்பார். கழிவறையில் இருந்து வரும் அனைத்தும் அங்கேதான் செல்கிறது, கிருமிகளும், நோய்களும், கரப்பான்களும், புழுக்களும் மேயும் அந்த இடத்தின் அருகில் அவர்கள் உட்காருகிறார்கள். யோசிக்கவே விரும்பத்தகாதது போல் இருக்கிறதல்லவா?

ஆனால் இப்படி இருக்கும் உன்னுடைய ஒழுகும், நாற்றமான, நோயுற்ற பாவங்களை அவர் சிலுவைக்கு எடுத்து சென்று அதற்க்கு பதிலாக தன்னுடைய நர்குணத்தையும் தூய்மையையும் தந்து இடமாற்றினார்.

இப்போது, தந்தையாகிய ஆண்டவர் உன்னைப் பார்க்கும்போது, உண்மையாக அவர் காண்பது இயேசுவினுடைய முழுமையையே. ஆம். இயேசு வெறும் தவறுகளை செய்யாமல் இருந்தது மட்டும் அல்ல, அவர் எப்போதுமே எல்லாவற்றையும் சரியாக செய்தார். ஆகையால், ஆண்டவர் உன்னைத் தவறே செய்யாத ஒருவரைப் போலவும், எப்போதுமே சரியானதை செய்யும் ஒருவரைப் போலவும் காண்கிறார். ஆண்டவர் உன்னை பரிபூரணமான, அழகான ஒருவராக காண்கிறார்.

ஆஹா, இதனால் தான் இதை “ஆச்சர்யமான கிருபை” என்று அழைக்கின்றனர். நமக்கு தகுதியில்லாத நன்மையை அவர் வழங்கினார்.

எடு

ஆண்டவர் இவ்வளவு நல்லவராகவும், அவருடைய கிருபை இவ்வளவு அற்புதமாகவும் இருந்தால், நீ என்ன செய்ய வேண்டும்?

அவருடைய இரகத்திற்காகவும், கிருபைக்காகவும், நல்லவராக இருப்பதற்காகவும் அனுதினமும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இதற்க்காகத்தான் நாம் அவருக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள விரும்புகிறோம்.

அப்புறம், இன்னொரு விஷயம், ஆண்டவர் உன்னை இப்படி பார்க்கிறாரென்றால், நீயும் உன்னை அப்படியே பார்க்க ஆரம்பிக்கவேண்டும்.

நீ சூப்பர்!

Dr. Andy

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

புதையல் வேட்டை 2

வியப்படைவதற்கு தயாராகு. ஆண்டவரின் அற்புதமான அனுபவத்திற்குள் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த புதையல் வேட்டை தொடர் உன் மனதைக் கவரும்! இந்த மூன்று திட்டங்களுடைய கருப்பொருட்கள் இங்கே: விசுவாசம், அடையாளம் மற்றும் முடிவைக் கண்டறிதல். டோக்கியோவில் உள்ள NewDayToDayவின் டாக்டர் Andy Meeko அசலாக எழுதிய உலகளாவிய குழந்தைகள்/இளைஞர் சீடத்துவ தொடரை அடிப்படையாக கொண்ட புதையல் வேட்டை முயற்சி.

More

Every Day Japan க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.treasurehuntproject.com/

சம்பந்தப்பட்ட திட்டங்கள்