“இயேசுவைப் போல” ஒரு தரிசனத்துடன் வாழ்தல்மாதிரி

“இயேசுவைப் போல” ஒரு தரிசனத்துடன் வாழ்தல்

4 ல் 1 நாள்

"இயேசுவைப் போல” ஒரு தரிசனத்தோடு வாழ்தல்.

நமது வேகமான வாழ்க்கையில், இயேசுவைப் போல நாம் உண்மையிலேயே தெளிவான தரிசனத்துடன் வாழ்கிறோமா? என்பதை சிந்திப்பது மிக முக்கியம்.

இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் அவரது தரிசனம் என்ன என்பதை,அவர்மனிதனாக பூமியில் வாழ்ந்த சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும்,கலாச்சாரங்களையும் தாண்டிய ஒரு சிறப்பான தரிசனத்தை முன்பாக வைத்து வாழ்ந்ததை வேதத்தில் வாசித்து அறிகிறோம்.

அவரது ஒரே தரிசனம் மாறாத அன்பு, இரக்கம் மற்றும் தெய்வீக நோக்கத்தில் அதாவது பிதாவின் திட்டத்தில் ஒன்றாக இருந்தது—. அவரது ஒவ்வொரு செயலும், வார்த்தையும், அறிவுரைகளும் செயல்பாடுகளும் அவருடைய தரிசனத்தையே முக்கியப்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். அவரது பூமிக்குரிய வாழ்க்கை குறுகியதாக இருந்தபோதிலும், அவரது தரிசனம் மனித வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளது,இது உலகெங்கிலும் அவரைப் போல வாழ வேண்டும் என விருப்பம் கொள்கிற கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது என்பது உறுதி .

இயேசுவின் தரிசனம் மனிதகுலத்தின் மீதான நிபந்தனையற்ற அன்பில் வேரூன்றி இருந்தது. சமூகப் பிரிவுகளுக்கு அப்பால், ஒதுக்கப்பட்டவர்களைச் சேர்த்துக் கொள்வதையும் மேலும், நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதையும், மனந்திரும்புபவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதையும் இயேசு தன்னுடைய தரிசனத்தில் கண்டார். இயேசுவின் ஒரே தரிசனம் முழுமனுக்குலத்தையும் மனதில் கொண்டதாய் அமைந்தது. அவருடைய அன்புக்கும் இரக்கத்திற்கும் எல்லையே இல்லை என்பதையும் நிரூபிக்கிறது.

இயேசுவின் தரிசனத்தின் முக்கிய கருத்தானது மனிதகுலத்தை தேவனுடன் ஒப்புரவு செய்வதற்கான அவரது தெய்வீக பணியாகும். இயேசு தனி மனிதர்களின் இரட்சிப்பையும் நித்திய ஜீவனையும் காணக்கூடிய ஒரு உலகத்தை அவர் தன் மனதில் கொண்டிருந்தார். அவரது போதனைகளும் செயல்களும் இந்த தரிசனத்திற்கு ஒரு சான்றாகவே இருந்தன என்பதை நாம் அறிவோம்.இயேசுவின் திவ்ய வார்த்தைகள் தெய்வீகத்துடன் நெருக்கமான தொடர்பை உருவாக்கி இன்றும் மக்களை வழிநடத்துகின்றன.

இயேசுவின் தரிசனத்தின் மிக முக்கியமான பகுதி தன் வாழ்வையே, முன்மாதிரியாக வைத்து வாழ்வதைக் காண்பிக்கிறது. அவரது ஒவ்வொரு செயலும், வார்த்தையும், அவரது தரிசனத்தையே பிரதிபலிக்கிறது. அவர் தனது பிதாவினிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட அந்த தரிசனத்தை நிறைவேற்றும்படி அவரைப் பின்பற்றுபவர்களை இன்றும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு நடைமுறை தரிசனம் ஏன் அவசியம்?

இவ்வகையான தரிசனம் நாம் யார், எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வரையறுக்கிறது, நம் வாழ்க்கையின் நோக்கத்தையும் வழிநடத்துதலையும் அளிக்கிறது.ஒரு நடைமுறை தரிசனம் என்பது நமது கடந்த கால அனுபவங்களில் நெருக்கமாக வேரூன்றியுள்ளது என்பதும் மேலும், அர்த்தமுள்ள எதிர்காலத்திற்கு நேராக இப்போதிருந்தே நம்மை வழிநடத்துகிறது.தரிசனத்தின் வல்லமை தான் என்ன?தரிசனம் என்பது ஒரு வல்லமை வாய்ந்த சக்தியாகும், இது நமது குழப்பமான வாழ்க்கையில் தெளிவையும் ஒழுங்கையும் தருகிறது. இது உலகத்தை நாம் அறிந்து கொள்ளும் விதத்தை மாற்றுகிறது, வெற்றிகரமான வாழ்க்கையின் தெளிவான படத்தை வழங்குகிறது.

தரிசனம் உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது

எதிர்காலத்தைப் பற்றிய நமது தரிசனம் நிகழ்காலத்தில் நமது செயல்களைத் தெளிவுபடுத்துகிறது மற்றும் மட்டுமின்றி நம்மை உற்சாகப்படுத்துகிறது. இது நமது வாழ்க்கையில் நாம் செய்யும் தெரிந்தெடுப்புகளின் மூலமே நம்மை வழிநடத்துகிறது, மேலும் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலங்களையும் வரையறுக்க உதவுகிறது. நாம் யாராக மாற விரும்புகிறோம், எதற்காக நாம் தீர்மானங்களை தேர்வு செய்ய வேண்டும்,மற்றும் நாம் செய்ய விரும்பும் சாதனைகள் போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு இது பதிலளிக்கிறது.

இயேசுவைப் போலவே, ஒரு தரிசனத்துடன் வாழ்வது,உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்களுடனும் மற்றும் விருப்பங்களுடனும் ஒத்துப்போகும் தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி வரும் நாட்களில் "இயேசுவைப் போல் உங்கள் தரிசனத்துடன் வாழ்வோம்" என்ற தியானத் தொடரின் வழிகாட்டுதல்களுக்கு மேலும் காத்திருங்கள்.

பிரதிபலிப்புக் கேள்விகள்:

1. உங்களுக்கு தெளிவான வாழ்க்கைப் தரிசனம் இருக்கிறதா? உங்கள் அன்றாட தேர்வுகளுக்கு இது எவ்வாறு வழிகாட்டுகிறது?

2. மன அழுத்தம் நிறைந்த காலங்களில், உங்கள் திறனைப் பயன்படுத்த ஆவிக்குரிய பகுத்தறிவைப் பயன்படுத்தி, கிறிஸ்துவைப் போன்ற ஒரு தரிசனத்தை நீங்கள் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?

3. தேவனின் வாழ்க்கைத் திட்டத்தின் மீதான நம்பிக்கை கடந்த கால தவறுகள் மற்றும் புதிய தொடக்கங்கள் பற்றிய உங்கள் தரிசனத்தை எவ்வாறு பாதிக்கிறது?

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

“இயேசுவைப் போல” ஒரு தரிசனத்துடன் வாழ்தல்

வாழ்க்கையின் பரபரப்பான சூழ்நிலையில், நம் நோக்கத்தையும் பாதையையும் இழந்துவிடுவது மிகவும் எளிது. ஆனால் இயேசு ஒரு தெளிவான தரிசனத்துடன் வாழ்ந்தது போல, நாமும் வாழ முடியும். குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” ஆகிய வசனங்களிலிருந்து காலவரையற்ற தெய்வீக ஞானத்துடன் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள். இயேசு எவ்வாறு ஒரே நோக்கத்துடன் வாழ்ந்தாரோ, அதைப் போலவே ஒரு குறிப்பிட்ட தரிசனத்துடன் வாழ்வது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், தெளிவையும், தெய்வீக வழிகாட்டுதலையும் கொண்டு வரும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie Davidக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in/